அஜித் குமாரின் 64-வது படத்தில் நடிக்கும் பிரபல மலையாள நடிகர்? வைரலாகும் தகவல்
Ajith Kumar 64 Movie Update: நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்திற்கு தற்காலிகமாக AK 64 என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா மட்டும் இன்றி பான் இந்திய அளவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் இன்றி கடந்த 3 ஆண்டுகளாக தனது ரேஸிங்கிலும் அதிக அளவில் கவனத்தை செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து படங்களின் மூலம் ரசிகர்களை மகிழ்வித்துவந்த நடிகர் அஜித் குமார் பல நாடுகளுக்கு சென்று ரேஸிங்கில் கலந்துகொண்டு வெற்றிப் பெற்று இந்திய மக்கள் அனைவருக்கும் பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுத்து வருகிறார். நடிப்பு மற்றும் ரேஸிங் என்று இரண்டையும் இரண்டு கண்கள் போல பார்த்து வரும் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து இரண்டு படங்கள் திரையரங்குகளில் வெளியானது.
அதன்படி நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டு வெளியான விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு அவரது நடிப்பில் உருவாக உள்ள 64-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த படம் தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




அஜித் குமார் 64 படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்?
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இறுதியாக வெளியான குட் பேட் அக்லி படத்தினை இயக்கிய இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அடுத்ததாக அஜித் குமார் நடிப்பில் உருவாக உள்ள 64-வது படத்தையும் இயக்க உள்ளார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் வருகின்ற பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டில் இரண்டாவது வாரத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகை ஸ்ரீ லீலா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
Ajith’s #AK64 film shoot is set to begin in the second week of February.
In this film, #Mohanlal and #Sreeleela will be seen playing important roles alongside #AjithKumar. 🎬🔥 pic.twitter.com/7BNwBXSkcF— Movie Tamil (@_MovieTamil) January 24, 2026
Also Read… Dhanush: ‘டி55’ படத்திற்காக புது தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்த தனுஷ்.. வெளியான அறிவிப்பு இதோ!