Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பராசக்தி படத்திலிருந்து வெளியானது ரத்னமாலா பாடலின் வீடியோ!

Ratnamala Video Song : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பிக் சமீதத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தப் படத்தில் இருந்து ரசிகரக்ளிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரத்னமாலா என்ற பாடலின் வீடியோவைப் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

பராசக்தி படத்திலிருந்து வெளியானது ரத்னமாலா பாடலின் வீடியோ!
ரத்னமாலாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Jan 2026 10:23 AM IST

தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகம் ஆகி குறைவான ஆண்டுகளிலேயே மக்களின் மனதில் இடம் பிடித்து முன்னணி நாயகன்களின் பட்டியளில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இதற்கு மிக முக்கிய காரணம் அவர் சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே அவரது பேச்சு மற்றும் டைமிங் காமெடி மூலமாகவும் தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இவர் நடிகராக தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பிறகு மக்கள் மத்தியில் மேலும் வரவேற்பைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து ஹிட் கொடுத்து வருவதால் நடிகர் சிவகார்த்திகேயன் குறைந்த ஆண்டுகளிலேயே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பராசக்தி. இந்தி எதிர்ப்பு கொள்கையை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இயக்குநர் சுதா கொங்கரா எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

வெளியானது ரத்னமாலா பாடல் வீடியோ:

பராசக்தி படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து இருந்தார். இது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவான 100-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பராசக்தி படத்தில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற ரத்னமாலா என்ற பாடல் வீடியோவைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… உங்ககூட சேர்ந்து போராட்டம் மட்டும் பண்ணனும்… ஆனா உங்களுக்கு போட்டியா வந்துட கூடாதுல – வெளியானது தினேஷின் கருப்பு பல்சர் படத்தின் ட்ரெய்லர்!

பராசக்தி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… மம்முட்டி – மோகன்லாலின் பேட்ரியாட் படத்தின் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் அட்லி