Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Teeth Care: இனிப்பு சாப்பிட்டாலே சொத்தை பல் பயமா..? இதை செய்தால் வராது!

Dental Cavities: சொத்தை பற்கள் (Cavities) இன்று மக்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக ஏற்படுகிறது. இவை குழந்தைகள் மற்றும் சிறியவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினரையும் பாதிக்க செய்யும். இதனால், சொத்தை பல் பிரச்சனை ஏற்படுபவர்களுக்கு கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது.

Teeth Care: இனிப்பு சாப்பிட்டாலே சொத்தை பல் பயமா..? இதை செய்தால் வராது!
சொத்தை பற்கள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Dec 2025 19:34 PM IST

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மக்கள் பெரும்பாலும் தங்களை கவனித்து கொள்வது கிடையாது. இதன் விளைவாக, எந்த உணவுகள் தங்களுக்கு நல்லது என்று அறியாமல் பலரும் தங்களுக்கு பிடித்த உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். இதனால், சொத்தை பற்கள் (Cavities) இன்று மக்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாக ஏற்படுகிறது. இவை குழந்தைகள் மற்றும் சிறியவர்களுக்கு மட்டுமல்ல, எல்லா வயதினரையும் பாதிக்க செய்யும். இதனால், சொத்தை பல் பிரச்சனை (Teeth Problem) ஏற்படுபவர்களுக்கு கடுமையான வலி மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. இந்தநிலையில், இனிப்புகளை சாப்பிட்ட பிறகும் சொத்தை பற்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.

இனிப்பு சாப்பிட்ட உடனேயே வாயைக் கழுவுங்கள்:

பலர் இனிப்புகளை சாப்பிட்ட பிறகு வாயைக் கழுவாமல் மணிக்கணக்கில் விட்டு விடாதீர்கள். இது பற்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இனிப்பு சாப்பிட்ட உடனேயே வாயைக் கழுவினால், சர்க்கரை அடுக்கு பற்களில் படிய விடாது. இதனால் துவாரங்கள் மற்றும் சொத்தை பற்கள் ஏற்படும் அபாயம் குறைகிறது.

ALSO READ: அழுத்தி தேய்த்தால் பல் சுத்தமாகுமா? எச்சரிக்கும் மருத்துவர் ஜனனி ஜெயபால்!

இரண்டு முறை பல் துலக்குதல்:

காலையிலும் எழுந்ததும், இரவு தூங்க செல்வதற்கு முன்பும் பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். இரவில் பல் துலக்கவில்லை என்றால், மீதமுள்ள சர்க்கரை மற்றும் உணவுகள் இரவு முழுவதும் உங்கள் பற்களில் இருக்கும். இது பாக்டீரியாக்கள் வளர வழிவகுக்கும். அதன்படி, சொத்தை பற்கள் வராமல் இருக்க நல்ல தரமான ஃப்ளோரைடு பற்பசையைப் பயன்படுத்துங்கள்.

மவுத்வாஷைப் பயன்படுத்துங்கள்:

நீங்கள் எவ்வளவு நன்றாக பல் துலக்கினாலும், உங்கள் பற்களுக்கு இடையில் சிக்கியுள்ள உணவுத் துகள்களை அகற்றுவது கடினம். எனவே ஒரு நாளைக்கு ஒரு முறை மவுத்வாஷை பயன்படுத்துங்கள். இது பாக்டீரியாவைக் குறைத்து உங்கள் சுவாசத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். மவுத்வாஷில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் வாய் ஆரோக்கியத்தை பேணுவது மட்டுமின்றி, புத்துணர்ச்சியை தரும்.

இனிப்புகளின் அளவைக் கட்டுப்படுத்துங்கள்:

இனிப்புகள் சாப்பிட்டால் மட்டுமே பல் சிதைவை ஏற்படுத்தாது. ஆனால், அதிகமாக சாப்பிடுவது பல் சிதைவை ஏற்படுத்தும். ஒரு நாளைக்கு 1-2 சிறிய இனிப்புகளுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக லட்டு உள்ளிட்ட ஒட்டும் இனிப்புகள் உங்கள் பற்களில் ஒட்டிக்கொள்ள தொடங்கும். எனவே அவற்றைத் தவிர்க்கவும். அப்படி இல்லையென்றால், உங்கள் வாயை கொப்பளிக்கலாம்.

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:

பழங்கள், காய்கறிகள், வெள்ளரிகள், ஆப்பிள்கள் அல்லது கேரட் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் உங்கள் பற்களை இயற்கையாகவே சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை மென்று சாப்பிடுவது உமிழ்நீர் உற்பத்தியை அதிகரிக்கிறது. இது உங்கள் வாயில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கும்.

நிறைய தண்ணீர் குடிக்கவும்:

நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் வாயில் உள்ள அமிலம் வெளியேற்றப்படும். நீங்கள் சாப்பிடும் சர்க்கரை உங்கள் பற்களில் அமிலத்தை உருவாக்கி பற்சிப்பியை அரிக்கும். எனவே, நாள் முழுவதும் குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.

ALSO READ: குழந்தைகள் எந்த வயதில் பல் துலக்க வேண்டும்..? பல் மருத்துவர் ஜனனி விளக்கம்! 

குளிர் பானங்கள் மற்றும் சோடாக்களைத் தவிர்க்கவும்:

ஸ்பைரட், கோலா போன்ற குளிர் பானங்களை குடிக்கும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால் இவையும் உங்கள் பற்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில் இவற்றில் எனாமலை பலவீனப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இதற்கு பதிலாக, சூடான நீர் அல்லது தயிர் குடிக்கலாம்.