Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Bathroom Lifestyle: குளியலறையில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத பொருட்கள்.. இவை நோயை உண்டாக்கலாம்..!

Bathroom Safety Tips: குளியலறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் வீட்டின் மற்ற பகுதிகளை விட அதிகமாக இருக்கும். உண்மையில், குளிக்கும்போது வெளியேறும் நீராவி மற்றும் ஈரப்பதம் உங்கள் விலையுயர்ந்த பொருட்களைக் கெடுப்பது மட்டுமல்லாமல், அவற்றில் பாக்டீரியாக்கள் வளரவும் காரணமாகிறது. எனவே குளியலறையில் என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம். 

Bathroom Lifestyle: குளியலறையில் தவறுதலாக கூட வைக்கக்கூடாத பொருட்கள்.. இவை நோயை உண்டாக்கலாம்..!
பாத்ரூமில் வைக்கக்கூடாத பொருட்கள்..!Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Jan 2026 17:20 PM IST

ஒரு வீட்டிற்கு படுக்கை அறை, சமையலறை எப்படி முக்கியமோ, அதுபோல் குளியலறையும் (Bathroom) மிக மிக முக்கியமானது. ஆரோக்கியமான உணவுகள் நம்மை உள்ளிருந்து ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், குளியலறையில் குளிப்பது நம்மை வெளிப்புறத்தில் சுத்தமாக வைத்திருக்கிறது. இருப்பினும், குளியலறையை எப்போதும் மூடி வைத்திருப்பது நல்லது. ஈரப்பதம் (Humidity) மற்றும் துர்நாற்றம் வெளியேறும் என்பதால் இவ்வாறு செய்வது முக்கியம். அதேநேரத்தில், குளியலறையில் இருந்து வெளியேறும் நீர் வெளியேற வடிகால் சரியாக இருக்க வேண்டும், எங்கும் கசிவு இருக்கக்கூடாது. குளியலறையை சுத்தமாகவும், உலர்ந்ததாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பது மிக முக்கியமானது என்பதால், துருப்பிடித்த குழாய்கள் அல்லது மோசமான வடிகால் ஆகியவற்றை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

குளியலறையின் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் வீட்டின் மற்ற பகுதிகளை விட அதிகமாக இருக்கும். உண்மையில், குளிக்கும்போது வெளியேறும் நீராவி மற்றும் ஈரப்பதம் உங்கள் விலையுயர்ந்த பொருட்களைக் கெடுப்பது மட்டுமல்லாமல், அவற்றில் பாக்டீரியாக்கள் வளரவும் காரணமாகிறது. எனவே குளியலறையில் என்னென்ன பொருட்களை வைக்கக்கூடாது என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஒரு தனிமனிதன் ஏற்படுத்தும் உணவுக் கழிவுகள் எவ்வளவு தெரியுமா? ஷாக் ரிப்போர்ட்!

மேக்கப் – அழகு சாதனப் பொருட்கள்:

பெரும்பாலான பெண்கள் குளியலறை கண்ணாடி முன் மேக்கப் போட்டுவிட்டு, தங்கள் பொருட்களை அங்கேயே வைத்து விட்டு வருகிறார்கள். மேக்கப் பொருட்களில் உள்ள பொருட்கள் வெப்பம் மற்றும் ஈரப்பதத்திற்கு ஆளாகும்போது அவற்றின் தன்மை இழக்க தொடங்கும். ஈரப்பதத்தால் பவுடர்கள் உள்ளிட்டவை கட்டிகளாக உருவாகலாம். அதே நேரத்தில் திரவ ஃபவுண்டேஷன்கள் மற்றும் லிப்ஸ்டிக்குகள் பாக்டீரியாக்களால் பாதிக்கலாம். இதனால் தோல் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.

மருந்துகள்:

மருந்துப் பெட்டிகள் மற்றும் மருந்துகள் போன்றவை பெரும்பாலும் மறந்து குளியலறையில் வைத்து விடுகிறோம். குளியலறையில் வெப்பநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், இதில் வெளிப்படும் ஈரப்பதம் மற்றும் வெப்பம் மருந்துகளை பாதிக்கலாம். மேலும், காலாவதி தேதிக்கு முன்பே கெட்டுப்போகச் செய்யலாம். எனவே, படுக்கையறையில் பாதுகாப்பான அலமாரியில் மருந்துகளை வைத்திருப்பது எப்போதும் நல்லது.

துண்டுகள்:

குளியலறையில் துண்டுகளைத் தொங்கவிடுவதும் நல்ல யோசனையல்ல. குளியலறையில் உள்ள ஈரப்பதம் துண்டுகளின் இழைகளில் சிக்கிக்கொள்வதால், அவை விசித்திரமான வாசனையை ஏற்படுத்துகின்றன. துண்டுகள் ஈரமாகும்போது பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்களின் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறும். துண்டுகளைப் பயன்படுத்தும் போது மட்டுமே உள்ளே எடுத்துச் சென்று, பின்னர் வெயிலில் அல்லது திறந்த வெளியில் காய வைக்கலாம்.

மின்னணு சாதனங்கள்:

பலரும் இன்றைய நவீன காலத்தில் பாட்டு கேட்பதற்காக ஸ்மார்ட் போன்களையும் ஸ்பீக்கர்களையும் குளியலறைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அப்போது, இதுபோன்ற மின்னணு சாதனங்களுக்குள் ஈரப்பதம் ஊடுருவி, அவற்றின் உள் சுற்றுகளை சேதப்படுத்தும். இது சாதனத்தின் ஆயுளைக் குறைப்பதோடு, ஷார்ட் சர்க்யூட் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது.

ரேஸர்கள் மற்றும் கத்திகள்:

உங்கள் ரேஸரையும், பிளேடுகளை குளியலறையில் வைப்பது பாதுகாப்பானது என்று நினைக்கிறார்கள். காற்றில் உள்ள ஈரப்பதம் புதிய பிளேடுகள் பேக்கில் இருந்தாலும் துருப்பிடிக்கச் செய்யலாம். துருப்பிடித்த ரேஸரைப் பயன்படுத்துவது உங்கள் தோலை வெட்டினால் தொற்று அல்லது டெட்டனஸை ஏற்படுத்தும்.

நகைகள்:

குளியலறையில் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த ஆபகரணங்களை வைப்பது கருப்பாக மாற வழிவகுக்கும். ஈரப்பதம் உலோகங்களின் ஆக்சிஜனேற்ற செயல்முறையை துரிதப்படுத்தி அவற்றின் பளபளப்பைக் குறைக்கிறது. அதன்படி, இதுபோன்ற நகைகளை டிரஸ்ஸிங் டேபிள் அல்லது லாக்கரில் வைக்கலாம்.

ALSO READ: வீட்டை சிறியதாகவும், மலிவாகவும் காட்டும் பொருட்கள்… இவை உங்கள் வீட்டில் இருக்கிறதா?

நெயில் பாலிஷ்:

குளியலறையில் நெயில் பாலிஷ் பாதுகாப்பானது என்று நினைத்தால், அது தவறு. ஈரப்பதம் மற்றும் வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் நெயில் பாலிஷை தடிமனாகவும் ஒட்டும் தன்மையுடனும் ஆக்கி, பயன்படுத்துவதை கடினமாக்கும்.

டிஷ்யூ பேப்பர்:

டிஷ்யூ பேப்பர் மிக விரைவாக ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். குளியலறையில் உள்ள டிஷ்யூ பேப்பர் மற்றும் டிஷ்யூ ரோல்கள் காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி, ஈரமாகவும் கனமாகவும் மாறி, அவற்றைப் பயனற்றதாகவும், கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாகவும் மாற்றும்.