Pongal Cleaning: நெருங்கும் பொங்கல்! கைகளை அழுக்காக்காமல் வீட்டை இப்படி சுத்தம் செய்யலாம்!
Pongal Home Cleaning: பொங்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பலரும் இன்னும் வீட்டை சுத்தம் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலானோர் எளிதாக வீட்டை எப்படி சுத்தம் செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு தீர்வை தரும் வகையில் நாங்கள் எளிய குறிப்புகளை உங்களுக்காக தருகிறோம்.
தமிழ்நாட்டில் வருகின்ற 2026ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் (Pongal Festival) கொண்டாடப்பட இருக்கிறது. அதன்படி, பொங்கலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில், பலரும் இன்னும் வீட்டை சுத்தம் செய்யாமல் இருக்கிறார்கள். இதன் காரணமாக, பெரும்பாலானோர் எளிதாக வீட்டை எப்படி சுத்தம் (Home Cleaning) செய்வது என்று யோசித்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு தீர்வை தரும் வகையில் நாங்கள் எளிய குறிப்புகளை உங்களுக்காக தருகிறோம். இங்கு துடைப்பத்தை எப்படி சரியான முறையில் பயன்படுத்துவது முதல், சமையலறை டைல்ஸ்களை பளபளக்கச் செய்யும் வீட்டில் தயாரிக்கப்பட்ட திரவத்தை தயாரிப்பது வரை பொங்கலுக்கு வீட்டை சுத்தம் செய்வதற்கான 8 புதுமையான யோசனைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.
ALSO READ: பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது..? முக்கியத்துவம், வழிபாட்டு முறை விவரம் இதோ!
சாக்ஸைப் பயன்படுத்தி மின்விசிறியை சுத்தம் செய்தல்:
உங்களுக்கு சேர் அல்லது டேபிளில் ஏறி ஃபேனை சுத்தம் செய்ய பயமாக இருந்தால், ஒரு நீளமான குச்சியின் முனையில் ஒரு பழைய சாக்ஸைக் கட்டி, அதில் சிறிது சமையல் சோடாவைச் சேர்த்து, ஃபேனின் பிளேடுகளை துடைக்கலாம். இதனால், தூசி கீழே விழுவதற்குப் பதிலாக சாக்ஸில் ஒட்டிக்கொள்ளும்.




அலற்ஜியில் இருந்து பாதுகாப்பு:
சிலருக்கு சுத்தம் செய்யும் போது கைகளில் அலற்ஜி அல்லது கொப்புளங்கள் ஏற்படலாம். கைகளில் சாக்ஸ் அணிவதும், துணிகளை கைகளில் கட்டி கொண்டு சுத்தம் செய்வது தூசி மற்றும் ரசாயனங்களிலிருந்து பாதுகாக்க உதவும்.
பிடிவாதமான கறைகள் கூட எளிதில் நீங்கும்:
பல் துலக்கும் பிரஸை பயன்படுத்தி கதவுகளை சுத்தம் செய்யலாம். கதவுகளின் மூலைகளில் உள்ள மெல்லிய அழுக்குகளை அகற்ற பழைய பல் துலக்குதல் சிறப்பாகச் செயல்படும்.
வீட்டிலேயே எளிதாக சுத்தம் செய்யும் திரவத்தை எப்படி தயாரிப்பது..?
ஒரு கிண்ணம் தண்ணீரில் அரை கப் எலுமிச்சை சாறு, 2 டீஸ்பூன் பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா ஆகியவற்றைக் கலக்கவும். இதனுடன் வினிகரைச் சேர்த்தால், அது ஒரு மாதம் வரை நீடிக்கும்.
சிலந்தி தடுப்பு:
பேக்கிங் சோடா கலந்த தண்ணீரைக் கொண்டு சுவர்களின் மூலைகளைத் துடைப்பது சிலந்திகள் திரும்பி வருவதைத் தடுக்க உதவும்.
ALSO READ: குளிர்காலத்தில் தண்ணீரை தொட பயமா? இப்படி க்ளீன் செய்தால் வீடு பளபளக்கும்!
பழைய துடைப்பத்தை ஒட்டடை அடிக்கும் குச்சியாக மாற்றுவது எப்படி..?
உங்களிடம் ஒட்டடை அடிக்கும் குச்சி இல்லையென்றால், பழைய துடைப்பத்தை ஒரு நீண்ட குச்சியில் சொறுகி, உயரமான பகுதிகளை சுத்தம் செய்ய அதைப் பயன்படுத்தலாம்.
கதவுகளை பளபளப்பாக்குதல்:
சோப்பு நீரில் துடைத்த பிறகு, ஈரமான துணியில் சிறிது டெட்டாலை தடவி துடைக்கவும். இது கதவுகளை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல் கிருமிகளையும் கொல்லும்.