தினசரி பயன்படுத்தும் சோப்பும், டிடர்ஜென்ட்டும் உடலை விஷமாக்கலாம்.. எச்சரிக்கும் புற்றுநோய் மருத்துவர்!!
அதிலுள்ள ரசாயனங்கள், சுவாச மண்டலத்தை பாதித்து, அடிக்கடி இருமல், மூச்சுத்திணறல், மார்புச்சளி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். நீண்ட காலம் இவ்வகை ரசாயனங்களுக்கு உட்பட்டால், புற்றுநோய் அபாயமும் கணிசமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார். இந்த தீங்கினை, குறைக்க சில எளிய ஆனால் பயனுள்ள மாற்று வழிகளை அவர் பரிந்துரைத்துள்ளார்.
நாம் தினமும் பயன்படுத்தும் துணி துவைக்கும் சோப்புகள், வீட்டு சுத்தம் செய்யும் கிளீனர்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்ற நம்பிக்கையில் இருக்கிறோம். அவை நம் உடைகளை சுத்தமாகவும், வீட்டை வாசனையாகவும் வைத்திருப்பதால் எந்த ஆபத்தும் இல்லை என்று நினைக்கிறோம். ஆனால் இந்தப் பொருட்களில் மறைந்திருக்கும் சில ரசாயனங்கள் மெதுவாக நம் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வீடுகளில் தினமும் பயன்படுத்தும் டிடர்ஜென்ட்களும், கிளீனர்களும் புற்றுநோய் உட்பட பல தீவிர உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதைப்பற்றி இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ALSO READ: குறைவாக தண்ணீர் குடிக்கிறீர்களா? இது மன அழுத்தத்தை அதிகரிப்பது ஏன்?
சுத்தம் செய்யும் பொருட்களால் ஆபத்து:
View this post on Instagram
இதுகுறித்து புற்றுநோய் மருத்துவர் தாரங் கிருஷ்ணா தனது இன்ஸ்டாகிரம் பதிவில் கூறியதாவது, “நாம் வீடுகளில் பயன்படுத்தும் பல சுத்தம் செய்யும் பொருட்கள் பாதுகாப்பானவை என்று நினைக்கிறோம். ஆனால் அவற்றில் உள்ள சில மறைமுக ரசாயனங்கள் உடலுக்குள் மெதுவாக சேர்ந்து ‘slow poison’ போல செயல்பட்டு, புற்றுநோய் உட்பட பல தீவிர உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்” என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்களில் வரும் நல்வாசனை பெரும்பாலும் ‘ப்தாலேட்ஸ்’ (Phthalates) எனப்படும் ரசாயனங்களை மறைக்கப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.
மிக ஆபத்தான ரசாயனங்கள்:
அதோடு, இந்த ப்தாலேட்ஸ் (Phthalates) நீண்ட காலத்தில் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். குறிப்பாக பெண்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகள், குழந்தை வளர்ச்சி பாதிப்பு போன்றவற்றிற்கு இது காரணமாகலாம். மேலும், சில டிடர்ஜென்ட்களில் ‘ஃபார்மால்டிஹைடு’ (Formaldehyde) மற்றும் ‘பென்சீன்’ (Benzene) போன்ற மிக ஆபத்தான ரசாயனங்கள் உள்ளன. இவை சுவாச மண்டலத்தை பாதித்து, அடிக்கடி இருமல், மூச்சுத்திணறல், மார்புச்சளி போன்ற பிரச்சனைகளை உருவாக்கும். நீண்ட காலம் இவ்வகை ரசாயனங்களுக்கு உட்பட்டால், புற்றுநோய் அபாயமும் கணிசமாக அதிகரிக்கும் என்று எச்சரித்துள்ளார்.
பாதுகாப்பான மாற்று வழிகள் என்ன?
இந்த தீங்கினை, குறைக்க சில எளிய ஆனால் பயனுள்ள மாற்று வழிகளை அவர் பரிந்துரைத்துள்ளார். அதன்படி, ரசாயனங்கள் அதிகம் உள்ள டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்களுக்கு பதிலாக, இயற்கை மற்றும் மூலிகை அடிப்படையிலான சுத்தம் செய்யும் பொருட்களை பயன்படுத்தலாம். இவை பொதுவாக தண்ணீருடன் சேர்த்தாலே போதும்; உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இதில் இருக்காது என்கிறார்.
ALSO READ: தூங்குவதற்குமுன் காலில் சாக்ஸ் அணிவதால் நன்றாக தூக்கம் வருமா? உண்மை என்ன?
மேலும், வீட்டிற்குள் கொண்டு வரும் ஒவ்வொரு பொருளும் குடும்பத்தின் உடல் நலத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதனால் எந்த பொருளை வாங்குகிறோம் என்பதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குடும்பத்தின் பாதுகாப்பை முதன்மையாகக் கருதுங்கள். இன்றைய காலத்தில் சுத்தம் என்ற பெயரில் உடல் நலத்தை இழக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறிய மாற்றங்கள் மூலமும், சரியான தேர்வுகள் மூலமும் நீண்ட கால ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.