Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Pongal 2026: பொங்கல் ​​ஏன் கொண்டாடப்படுகிறது..? முக்கியத்துவம், வழிபாட்டு முறை விவரம் இதோ!

Pongal 2026 History Significance: தமிழ்நாட்டில் நெல் அறுவடைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த காலகட்டத்தில், கடவுள்கள் 6 மாத கால தூக்கத்திற்குப் பிறகு விழித்தெழுந்து மனிதர்கள் மீது செழிப்பையும் செல்வத்தையும் பொழிவார்கள் என்று நம்பப்படுகிறது.

Pongal 2026: பொங்கல் ​​ஏன் கொண்டாடப்படுகிறது..? முக்கியத்துவம், வழிபாட்டு முறை விவரம் இதோ!
பொங்கல் பண்டிகை வரலாறு
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jan 2026 15:42 PM IST

பொங்கல் பண்டிகை (Pongal 2026) வருகின்ற 2026 ஜனவரி 14 ம் தேதி தொடங்கி 2026 ஜனவரி 17ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. தமிழ்நாட்டில் நெல் அறுவடைக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் ஒரு பண்டிகையாக பொங்கல் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த காலகட்டத்தில், கடவுள்கள் 6 மாத கால தூக்கத்திற்குப் பிறகு விழித்தெழுந்து மனிதர்கள் மீது செழிப்பையும் செல்வத்தையும் பொழிவார்கள் என்று நம்பப்படுகிறது. இந்த புனித நாளில், அறுவடை செய்த பொருட்களை கொண்டு சர்க்கரை பொங்கல் (Sakkarai Pongal) உள்ளிட்ட இனிப்பு வகைகளை செய்து உயிர் சக்தியாக கருதப்படும் சூரியனை வணங்குகிறார்கள். தமிழ்நாட்டில் பொங்கலை போன்று வட இந்தியாவில் மகர சங்கராந்தி, பஞ்சாபில் லோஹ்ரி மற்றும் குஜராத்தில் உத்தராயணம் போன்ற முக்கிய பண்டிகைகளும் இந்த காலகட்டத்தில் கொண்டாடப்படுகின்றன.

ALSO READ: பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்! ஈஸியாக சர்க்கரை பொங்கல் இப்படி செய்து பாருங்க..!

பொங்கல் ஏன் கொண்டாடப்படுகிறது?

இது ஒரு புதிய பயிரின் வருகையையும் அறுவடை காலத்தின் முடிவையும் குறிக்கிறது. விவசாயிகளையும் அவர்களின் கடின உழைப்பையும் கௌரவிக்கிறது. இது சூரியக் கடவுள், பூமி தாய் மற்றும் விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் பண்டிகையாகும்.

பொங்கல் பண்டிகையை எப்படி கொண்டாடுவார்கள்..?

போகிப் பொங்கல்:

பொங்கல் பண்டிகையின் முதல் நாளில், மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். இந்த நேரத்தில், முழு வீடும் சுத்தம் செய்யப்படுகிறது. இது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்துகிறது. வீட்டில் கழிக்கப்பட்ட பொருட்களை வீட்டுக்கு வெளியே போட்டு எரிக்கும் பழக்கம் மக்களிடையே உள்ளது. இருப்பினும், இன்றைய நவீன காலக்கட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், போகி பண்டிகை கவனத்துடன் கொண்டாடுவது நல்லது.

சூரியப் பொங்கல் அல்லது பெரும் பொங்கல்:

சூரியப் பொங்கல் அல்லது பெரும் பொங்கல் இரண்டாவது நாளில் கொண்டாடப்படுகிறது. சூரியனை வழிபட்ட பிறகு, வயல்களில் புதிய பயிர்கள் பழுக்க வைப்பதைக் கொண்டாட சர்க்கரை பொங்கல் என்ற இனிப்பு உணவு தயாரிக்கப்படுகிறது.

மாட்டுப் பொங்கல்:

இது பொங்கல் பண்டிகையில் மூன்றாவது நாள் கொண்டாடுவது மாட்டு பொங்கல் ஆகும். இந்த நாள் கால்நடைகளுக்கு அல்லது பண்ணை வேலைக்குப் பயன்படுத்தப்படும் கால்நடைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நாளில், இந்த கால்நடைகள் வணங்கப்பட்டு சிறப்பு உணவு அளிக்கப்படுகின்றன. கிராம புறங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெரும் பொங்கலுக்கு அடுத்த நாளான மாட்டு பொங்கலையே சிறப்பாக கொண்டாடுவார்கள்.

ALSO READ: பொங்கலுக்கு சூப்பர் ஸ்வீட்! குண்டூர் ஸ்பெஷல் மல்பூரி ரெசிபி இதோ!

காணும் பொங்கல்:

பொங்கலின் கடைசி நாள் காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கடற்கரை மற்றும் பார்க் போன்ற இடங்களில் ஒன்று கூடி, விரும்பியதை சாப்பிட்டு கொண்டாடுவார்கள்.