Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Food Recipe: ஜில் மழையுடன் ஹாட் ஸ்நாக்ஸ்.. சிம்பிள் & டேஸ்ட் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் ரெசிபி!

Monsoon Potato Nuggets Recipe: உருளைக்கிழங்கு உணவில் மிகவும் மாவுச்சத்து நிறைந்த பகுதியாகும். அவை இயற்கையில் காரத்தன்மை கொண்டவை மற்றும் போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும், இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது.

Food Recipe: ஜில் மழையுடன் ஹாட் ஸ்நாக்ஸ்.. சிம்பிள் & டேஸ்ட் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் ரெசிபி!
உருளைக்கிழங்கு நக்கட்ஸ்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Nov 2025 18:39 PM IST

அசைவ உணவில் சிக்கன் என்பதுபோல் சைவ உணவில் உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. உருளைக்கிழங்கை பொரியல் செய்து, அதை தயிர் அல்லது தக்காளி சாதத்துடன் சாப்பிடும்போது சுவையானது அமிர்தமாக இருக்கும். அதேபோல், மழைக்காலத்தில் (Rainy Season) வீட்டிலேயே ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் உங்களுக்கு சாப்பிட விருப்பம் என்றால், எளிதான முறையில் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் (Potato Nuggets) செய்யலாம். இதை மழை பெய்யும்போது சூடான டீயுடன் மொறுமொறுப்பாக ருசிக்க சுவையாக இருக்கும். அந்தவகையில், இன்று மழைக்காலத்தில் சாப்பிடக்கூடிய வகையில் உருளைக்கிழங்கு நக்கட்ஸ் எளிய செய்முறையை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: மழைக்காலத்தில் மகத்தான ரெசிபி.. ஆரோக்கியமான காளான் சூப் செய்வது எப்படி?

உருளைக்கிழங்கு நக்கட்ஸ்

தேவையான பொருட்கள்:

  • உருளைக்கிழங்கு – 2 முதல் 3
  • துருவிய சீஸ் – 1/2 கப்
  • கார்ன்ஃப்ளார் மாவு – 2 டேபிள்ஸ்பூன்
  • பிரட்தூள்- 1/2 கப்
  • சில்லி ப்ளேக்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

உருளைக்கிழங்கு நக்கட்ஸ் செய்வது எப்படி..?

  1. உருளைக்கிழங்கு நக்கட்ஸ் செய்ய முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் துருவிய சீஸ், கார்ன்ஃப்ளார் மாவு , பிரட்தூள்கள், சில்லி ப்ளேக்ஸ், மற்றும் சுவைக்கு உப்பு சேர்க்கவும். இவை அனைத்தையும் நன்கு பிசைந்து எடுத்து கொள்ளவும்.
  2. இந்த உருளைக்கிழங்கு மசாலா கலவையை ஒரு மூடியால் மூடி, குறைந்தது 30 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.
  3. சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, மாவு போல் பிசைத்து சப்பாத்திக்கு மாவு பிசைவது போல் உருண்டைகளாக எடுத்து கொள்ளவும்.
  4. இப்போது உருண்டை போட்ட மாவை ஒரு தட்டையான மேற்பரப்பில் வைத்து, உருளைக்கிழங்கை உங்கள் கைகளால் உருட்டி சுமார் 350 மிமீ நீளமுள்ள ஒரு ரோலை உருவாக்கவும்.
  5. இந்த உருண்டையை சுமார் 15 சம பாகங்களாக வெட்டி எடுத்து கொள்ளவும்.
  6. இப்போது ஒரு பெரிய கடாய் அல்லது நான்-ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கி, உருளைக்கிழங்கு நக்கட்ஸ் அனைத்து பக்கங்களிலும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  7. உருளைக்கிழங்கு நக்கட்ஸை நன்றாக வறுத்த பிறகு, அவற்றை ஒரு டிஷ்யூ பேப்பரில் எடுத்து, தக்காளி கெட்ச்அப் மற்றும் டீயுடன் சூடாக சாப்பிட்டு மகிழுங்கள்.

ALSO READ: தந்தூரி டீ குடிக்க கடைக்கு போக வேண்டாம்.. இப்படி செய்து வீட்டிலேயே ருசிங்க!

உருளைக்கிழங்கு நன்மைகள்:

உருளைக்கிழங்கு உணவில் மிகவும் மாவுச்சத்து நிறைந்த பகுதியாகும். அவை இயற்கையில் காரத்தன்மை கொண்டவை மற்றும் போதுமான அளவு வைட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றைக் கொண்டுள்ளன. மேலும், இதில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இவை மலச்சிக்கல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சினைகளைப் போக்க உதவுகிறது. உருளைக்கிழங்கு இதய ஆரோக்கியம், இரத்த அழுத்தம் மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. எனவே, நீங்கள் நிச்சயமாக உங்கள் உணவில் உருளைக்கிழங்கைச் சேர்க்க வேண்டும்.