Food Recipe: மழைக்காலத்தில் சூடாக சாப்பிட சூப்பர் ஸ்நாக்ஸ்.. 5 நிமிடத்தில் டீயுடன் ருசிக்கலாம்..!
Monsoon Snacks: மழைநேரத்தின்போது சூடாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று பலரும் வடை, பஜ்ஜி மற்றும் பக்கோடா பக்கம் நம் கவனம் திரும்பும். இதன் காரணமாக, ஒவ்வொரு முறை மழைத்துளிகள் ஜன்னலைத் தொடும் போதும், இவைகளே முதலில் நினைவுக்கு வரும் என்பதே உண்மை.
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பருவமழை (Monsoon) தொடர்கிறது. அதன்படி, இப்போதெல்லாம் கிட்டத்தட்ட தினமும் லேசானது முதல் கனமழை பெய்கிறது. மழைக்காலத்தின் மண் வாசனை சமையலறையின் நறுமணத்துடன் இணையும்போது, நாம் சாப்பிடும் உணவின் சுவை இரட்டிப்பாகிறது. மழைநேரத்தின்போது சூடாக எதையாவது சாப்பிட வேண்டும் என்று பலரும் வடை (Vada), பஜ்ஜி மற்றும் பக்கோடா பக்கம் நம் கவனம் திரும்பும். இதன் காரணமாக, ஒவ்வொரு முறை மழைத்துளிகள் ஜன்னலைத் தொடும் போதும், இவைகளே முதலில் நினைவுக்கு வரும். அந்தவகையில், உங்களுக்கு வித்தியாசமாக எதையாவது சாப்பிட வேண்டும் என்றால் இந்த ரெசிபிகளை ட்ரை பண்ணுங்க..
சோளம் – சீஸ் ரோல்ஸ்:
மழைக்காலத்தில் வீட்டிலேயே சோளம் மற்றும் சீஸ் உருண்டைகளை எளிதாகச் செய்யலாம். வேகவைத்த சோளம், சீஸ் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்துக்கொள்ளுங்கள். உப்பு, சாட் மசாலா மற்றும் உங்களுக்குப் பிடித்த மசாலாப் பொருட்களைச் சேர்த்து சிறிய உருண்டைகளை உருவாக்குங்கள். இதை கருகவிடாமல் நன்றாக பொன்னிறமாக வறுத்து எடுங்கள். இந்த மொறுமொறுப்பான உருண்டைகள் மழைக்காலத்தில் டீயுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
ALSO READ: கசக்குதுன்னு ஒதுக்காதீங்க! ஸ்டஃப்டு பாகற்காய் இப்படி செய்தால் ருசி அள்ளும்!




பனீர் டிக்கா:
மழைக்காலத்தில் சாப்பிட பனீர் டிக்கா சூப்பரான டிஸ் ஆகும். முதலில் பனீரை சரியான அளவில் வெட்டி எடுக்கவும். ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி இஞ்சி – பூண்டு பேஸ்ட், மஞ்சள் மற்றும் மிளகாய் தூள் சேர்க்கவும். இதனுடன், கொத்தமல்லி தூள், கரம் மசாலா, சாட் மசாலா, கஸ்தூரி மேத்தி, எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.
இப்போது பனீர், வெங்காயம் மற்றும் கேப்சிகம் துண்டுகளை இந்த பேஸ்டில் சேர்த்து நன்றாக கலக்கவும். சுமார் 30 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர், ஒரு நான் – ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெயை தடவவும். இதில், பனீர், வெங்காயம் மற்றும் கேப்சிகத்தை பிரட்டி எடுத்து குச்சியில் குத்தி சாப்பிடலாம்.
மசாலா மக்கா சோளம்:
மழைக்காலத்தில் மக்கா சோளம் ஒரு சுவையான ஸ்நாக்ஸ் ஆகும். இதை நேரடியாக அடுப்பில் சுட்டு, இதன் மீது எலுமிச்சை, உப்பு மற்றும் மிளகாய் தூளை தடவி சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும்.
ALSO READ: பலாவில் பல வெரைட்டி! ஊறுகாய் முதல் சிப்ஸ் வரையிலான ரெசிபி இதோ!
பஜ்ஜி:
மொறுமொறுப்பான பஜ்ஜியும் ஒரு சூப்பரான ஸ்நாக்ஸ் ஆகும். மழைக்காலத்தில் இதன் சுவை இன்னும் சூப்பராக இருக்கும். அதன்படி, சிறிதளவு பஜ்ஜி மாவில் வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் வாழைக்காயை வெட்டி போட்டு வறுத்து எடுத்து சாப்பிடலாம்.