விரைவில் வெளியாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி? ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் தகவல்
Jailer 2 Movie Release Update: தமிழ் சினிமாவில் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவர்களின் கூட்டணியில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் ஓய்வுப்பெற்ற ஜெயிலராக நடித்த நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் காவல்துறை அதிகாரியாக இருக்கும் தனது ஒரே ஒரு மகன் வசந்த் ரவி எதிரிகளால் கொலை செய்யப்பட்டதை தெரிந்தபிறகு அந்த வில்லன்களை பழிவாங்க முடிவு செய்கிறார். இந்த பழிவாங்கும் படலத்தில் ரஜினிகாந்திற்கு ஆதரவாக பலர் வேலை செய்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் இறுதியில் தனது மகன் இறக்கவில்லை என்பதை அவரும் கெட்ட எண்ணம் உடையவர் என்பதையும் ரஜினிகாந்த் தெரிந்துகொள்கிறார்.
இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதுதான் இரண்டாம் பாகத்திற்கான லீடாக இயக்குநர் நெல்சன் திலீப் குமார் வைத்து இருந்தார். முதல் பாகத்தில் ஒரு சிறபபன ட்விஸ்டை இயக்குநர் வைத்துள்ளதால் அதன் இரண்டாம் பாகத்தைப் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விரைவில் வெளியாகும் ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் தேதி?
தொடர்ந்து ஜெயிலர் 2 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காட்சிகள் அடுத்த மாதத்திற்குள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் ஷாருக்கானின் காட்சிகளில் தோன்றுவார் என்று கூறப்படுகின்றது. இது நன்கு வரையறுக்கப்பட்ட கதாபாத்திர வளைவுடன் கூடிய ஒரு சரியான கேமியோவாக இருக்கும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது. இந்த நிலையில் படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
Also Read… சூர்யாவின் 47வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மாரி 2’ பட நடிகர்?
இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் தகவல்:
#Jailer2 Release Date Announcement Expected Soon 👀
– #ShahRukhKhan’s portions are scheduled to be shot by next month, with superstar Rajinikanth also appearing in #SRK’s segments.
– It’s going to be a proper cameo with a well-defined character arc.#KHxRK | #Thalaivar173— Movie Tamil (@_MovieTamil) February 23, 2026
Also Read… கொடைக்கானலில் நடிகையின் தந்தை சினிமா பாணியில் கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்