AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கொடைக்கானலில் நடிகையின் தந்தை சினிமா பாணியில் கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்

Actress Father Murder Case: கொடைக்கானலில் ஒரு வீட்டில் தமிழ் நடிகையின் தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனது மகளை காதலித்தவரை கொலை செய்த நிலையில், அதற்கு பழிவாங்கும் விதமாக இந்த சம்பவம் நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொடைக்கானலில் நடிகையின் தந்தை சினிமா பாணியில் கொலை – வெளியான அதிர்ச்சி தகவல்
நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொலை
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Feb 2026 16:11 PM IST

திண்டுக்கல், பிப்ரவரி 22 : கொடைக்கானல் (Kodaikanal) அருகே உள்ள ஒரு வீட்டில் பிரபல தமிழ் நடிகையின் தந்தை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூர்யாவின் (Suriya) மாயாவி படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்தவர் விஷ்ணுபிரியா. இவரது தந்தை சூரிய நாராயணனுக்கு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குறிஞ்சி ஆண்டவர் கோவில் அருகே வீடு உள்ளது. இவரது வீட்டை சுற்றுலா பயணிகளுக்கு உரிய அனுமதியின்றி வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில் இவரது வீட்டில் சுற்றுலா பயணிகள்5 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன் வந்து தங்கியுள்ளனர்.

நடிகையின் தந்தை கொடூர கொலை

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 21, 2026 அன்று நள்ளிரவில் அவரது வீட்டில் பணியாற்றி வந்த ஆறுமுகம் மற்றும் முரளில ஆகியோரை 5 பேரும் துணியால் கட்டிப்போட்டுள்ளனர். மேலும் சூர்ய நாராயணனையும் சேரில் அமர வைத்து அவரது முகம் மற்றும் உடல் முழுவதையும் டேப் வைத்து கட்டிப்போட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்களின் ஹார்ட் டிஸ்க் மற்றும் சூர்ய நாராயணன் அணிந்திருந்த செயின், மோதிரத்தையும் அந்த கும்பல் திருடி சென்றுள்ளனர். மேலும் அவரது வீட்டின் கேட்டையும் வெளிப்புறமாக பூட்டி சென்றுள்ளனர்.

இதையும் படிக்க : பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள்.. கட்டுப்பாட்டை இழுந்து வந்த கார்.. அடுத்து நடந்த சோக சம்பவம்!

இந்த நிலையில் துணியால் கட்டி போடப்பட்டிருந்த ஆறுமுகம் தனது கட்டுக்களை அவிழ்த்து விட்டு வெளியே வந்த சத்தம்போட்ட போது தான் இந்த சம்பவம் வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து பார்த்தபோது, சூர்ய நாராயணன் சேரில் அமர்ந்தபடி உயரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்க : பெண் காவல் ஆய்வாளரிடம் ரூ.5.42 கோடி சொத்து… தோண்டி துருவிய லஞ்ச ஒழிப்பு துறை… FIR- இல் அதிர்ச்சி தகவல்கள்!

மேலும் இந்த சம்வபத்தின் போது அவரது வீட்டில் வேலைபார்த்து வந்த ஆறுமுகம் மற்றும் முரளி ஆகியோரை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். மேலும் சம்பவ இடத்தில் மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நகைக்காக இந்த கொலை சம்பவம் நடந்ததா அல்லது கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகளை காதலித்த இளைஞரை சூர்ய நாராயணன் கொலை செய்ததற்காக நடந்த எதிர்வினையா என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.