AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யாவின் 47வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மாரி 2’ பட நடிகர்?

Suriya 47 Movie cameo Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் சூர்யா. இவரின் நடிப்பிலும், மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்திலும் உருவாகிவரும் படம்தான் சூர்யா47. இப்படத்தில் மாரி 2 படத்தில் நடித்த பிரபல நடிகர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வைரல்.

சூர்யாவின் 47வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘மாரி 2’ பட நடிகர்?
சூர்யா47 படத்தின் அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 22 Feb 2026 15:47 PM IST

நடிகர் சூர்யாவின் (Suriya) நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தெலுங்கு மற்றும் மலையாள இயக்குநர்களுடனும் புது படத்தில் இணைந்து நடித்துள்ளார். இவரின் நடிப்பில் ரெட்ரோ (Retro) படமானது இறுதியாக கடந்த 2025ம் ஆண்டில் வெளியாகியிருந்தது. இதையடுத்து ஆர்.ஜே.பாலாஜியின் (RJ. Balaji) இயக்கத்தில் கருப்பு (Karuppu) மற்றும் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்தில் சூர்யா46 (Suriya46) போன்ற திரைப்படங்களில் நடித்துவந்தார். இப்படங்களின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. இந்நிலையில் கருப்பு படத்தின் ரிலீசிற்கு பிறகே சூர்யாவின் 46வது திரைப்படமானது வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் (Jithu Madhavan) இயக்கத்தில் சூர்யா தனது 47வது (Suriya47) படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே தொடங்கிய நிலையில், சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் (Nazriya Nazim) நடிக்கும் நிலையில், நஸ்லென் மிக முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார். மேலும் இப்படத்தில் மாரி 2 (Maari 2) படத்தில் நடித்த மலையாள நடிகர் ஒருவர் கேமியோ வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த பிரபலம் வேறுயாருமில்லை நடிகர் டோவினோ தாமஸ் தான் (Tovino Thomas).

இதையும் படிங்க: என் குழந்தைகள் என்னுடைய எந்தப் படத்தையும் பார்த்ததில்லை – ஷாலினி அஜித்குமார்

சூர்யாவின் 47வது திரைப்படம் :

சூர்யாவின் 47வது படத்தை மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கும் நிலையில், சூர்யாவின் புது தயாரிப்பு நிறுவனமான ழகரம் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. மேலும் இதற்கு இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைத்துவருகிறார். இப்படமானது முழுமையாக மலையாள படமாக உருவாகும் என கூறப்பட்டுவந்த நிலையில், இதற்கு இயக்குநர் ஜித்து மாதவன் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க: சூர்யா 46 படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!

அதன்படி சூர்யாவின் 47வது படமானது சுத்த தமிழ் திரைப்படமாகதான் உருவாகிவருகிறதாம். இதில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள நிலையில், இதில் அவரின் கதாபாத்திரம் நெகட்டிவ் கலந்த வேடமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சூர்யா 47வது படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்றுவருகிறது. இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் முடிந்ததாகக் கூறப்படும் நிலையில், மிக பிரம்மாண்டமாக தயாராகிவருகிறதாம். இப்படமானது வரும் 2027ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுவருகிறது. சூர்யாவின் நடிப்பில் இன்னும் 2 படங்கள் வெளியாகாததால் படக்குழு இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.