AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சூர்யா 46 படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!

GV Prakash Kumar About Suriya 46: தென்னிந்திய சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகிறார். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது மட்டும் படங்களுக்கு இசையமைப்பாளராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் சூர்யா 46 படம் குறித்து முக்கிய அப்டேட்டை ஜிவி பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

சூர்யா 46 படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் அப்டேட் – வைரலாகும் பதிவு!
சூர்யா 46 படக்குழுImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Feb 2026 13:53 PM IST

தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் சூர்யா 46. இயக்குநர் வெங்கி அட்லூரி இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இவர் முன்னதாக தமிழ் சினிமாவில் வாத்தி என்ற படத்தை இயக்கியதன் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்தார். இதில் நடிகர் தனுஷ் நாயகனாக நடித்து இருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான லக்கி பாஸ்கர் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் பான் இந்திய அளவில் மாபெரும் வரவேற்பைப் பெற்றதுடன் பல விருதுகளையும் வென்றது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி எந்த நடிகரை இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் சூர்யா உடன் கூட்டணி வைப்பது குறித்து அறிவிப்பு வெளியாது. இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் தொடங்கியது. மேலும் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நிறைவடைந்து வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது.

சூர்யா 46 படம் குறித்து ஜிவி பிரகாஷ் குமார் சொன்ன சூப்பர் அப்டேட்:

இந்த சூர்யா 46 படத்தில் நடிகர் சூர்யா உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இவர் மூன்றாவது முறையாக இயக்குநர் வெங்கி அட்லூரி உடன் கூட்டணி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி அந்தப் பதிவில் கூறியதாவது சூர்யா 46 படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. படம் தொடர்பான அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் டைட்டில் அல்லது பாடல் வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Also Read… விமலின் வடம் படத்தை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ

ஜிவி பிரகாஷ் குமார் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Vijay Sethupathi: அரசன் படத்திலிருந்து விலகிவிட்டேனா? – விஜய் சேதுபதி விளக்கம்!