AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மீண்டும் இணையும் பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணி – டிராகன் 2 படம் உறுதி!

Pradeep Ranganathans Dragon 2 Movie Confirmed: பிரதீப் ரங்கநாதன் மற்றும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் கூட்டணியில் கடந்த 2025ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் டிராகன். இப்படம் வெளியாகி இன்றுடன் 1 ஆண்டு நிறைவடைந்த நிலையில், இதன் 2ஆம் பாகம் உருவாகுவது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.

மீண்டும் இணையும் பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணி – டிராகன் 2 படம் உறுதி!
டிராகன் 2 திரைப்பட அப்டேட்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Feb 2026 20:03 PM IST

கோலிவுட் சினிமாவில் இயக்குநராக நுழைந்து, தற்போது இளம் கதாநாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan). இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக டியூட் (Dude) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இதை அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கியிருந்த நிலையில், திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. அந்த வகையில் இப்படத்திற்கு முன், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவின் (Ashwath Marimuthu) இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடித்திருந்த திரைப்படம்தான் டிராகன் (Dragon). இப்படம் பிரதீப் ரங்கநாதனின் 2வது திரைப்படமாக கடந்த 2025 பிப்ரவரி 21ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இதில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகைகள் கயாடு லோஹர் (Kayadu Lohar) மற்றும் அனுபமா பரமேஸ்வரன் (Anupama Parameswaran) இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது சுமார் ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சூப்பர் ஹிட் வெற்றி திரைப்படமாக அமைந்திருந்தது. இந்நிலையில், இன்று 2026 பிப்ரவரி 21ம் தேதியோடு , இந்த படமானது வெளியாகி 1 ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இந்நிலையில் இதை கொண்டாடும் விதத்தில், ரசிகர்களுக்கு பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இருவருமே ஹேப்பி நியூஸ் கூறியுள்ளனர். அது என்னவென்றால், இவர்கள் இருவரின் கூட்டணியில் டிராகன் 2 (Dragon 2) படமானது உருவாகவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: KH X RK படத்தில் கமல்ஹாசனின் பெயர் முதலில் வர காரணம் என்ன? – வைரலாகும் தகவல்!

டிராகன் 2 திரைப்படம் உருவாகுவதாக பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த பதிவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன், “நண்பனிலிருந்து இயக்குநராக மாறுவதற்கு எனக்கு கொஞ்ச நேரம் எடுத்துக்கொண்டது. ஆனால் இப்பொது இந்த இரண்டிலும் சிறந்ததை நான் பெற்றுள்ளேன், விரைவில்” என அதில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் இரண்டு டிராகன்கள் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்து டிராகன் பார்ட் 2 படம் உருவாகுவதையும் உறுதி செய்துள்ளார்.

இதையும் படிங்க: விமலின் வடம் படத்தை யார் எல்லாம் பார்க்கலாம்? சென்சார் அப்டேட் இதோ

டிராகன் 2 படம் உருவாகுவது குறித்து அஷ்வத் மாரிமுத்து வெளியிட்ட பதிவு :

அந்த பதிவில் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து, டிராகன் திரைப்படம் 1 வருடத்தை கடந்தது தொடர்பாகவும், பிரதீப் ரங்கநாதன் மற்றும் ஏ.ஜி.எஸ் ப்ரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்தது குறித்தும் நெகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். மேலும் பிரதீப் ரங்கநாதன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இருவருமே இரண்டாவது முறையாக இணைவதாகவும் அறிவித்துள்ளார். தற்போது இந்த தகவலானது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மேலும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். ப்ரொடக்ஷன் நிறுவனம்தான் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது இவர்கள் வெளியிட்ட இந்த பதிவானது இணையதளத்தில் தீயாகப் பரவிவருகிறது.