AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

KH X RK படத்தில் கமல்ஹாசனின் பெயர் முதலில் வர காரணம் என்ன? – வைரலாகும் தகவல்!

KH X RK Movie Update: கோலிவுட் சினிமாவே மிக பிரம்மாண்டமாக எதிர்பார்த்த காம்போதான் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்தின் கூட்டணி. இந்த கூட்டணியில் KH X RK பட ப்ரோமோ இன்று வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் இப்படத்தில் கமல்ஹாசனின் பெயர் முதலில் வருவதற்கான காரணம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

KH X RK படத்தில் கமல்ஹாசனின் பெயர் முதலில் வர காரணம் என்ன? – வைரலாகும் தகவல்!
கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 21 Feb 2026 17:55 PM IST

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் (Rajnikanth) மற்றும் கமல்ஹாசன் (Kamal Haasan) ரசிகர்கள் மத்தியில் மிக பிரம்மாண்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் படம்தான் KH X RK. இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் கீழ் இன்பநிதி தயாரிக்க, இயக்குநர் நெல்சன் திலிக்குமார் (Nelson Dilipkumar) இயக்கவுள்ளார். மேலும் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravicahnder) இசையமைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மக்கள் மத்தியில் இந்த கூட்டணியானது மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கிட்டத்தட்ட சுமார் 47 ஆண்டுகளுக்கு பின் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் புது திரைப்படமானது தயாராகவுள்ளது. இந்த படமானது தமிழ் சினிமாவிலே இதுவரைக்கும் உருவாகாத மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படமானது 90ஸ் காலகட்ட கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்தில் தயாராகவுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இப்படத்தின் புரோமோ வீடியோ இன்று 2026 பிப்ரவரி 21ம் தேதியில் வெளியாகி எதிர்பாராத வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில் இந்த புரோமோவிலும் சரி, படத்தின் போஸ்டரிலும் சரி நடிகர் கமல்ஹாசனின் பெயர்தான் முதலில் உள்ளது. இந்நிலையில் இதற்கான காரணம் குறித்தும் தற்போது தகவல் ஒன்று வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘டாக்சிக்’ படத்தில் ரெட்டை வேடத்தில் நடிக்கும் யாஷ்.. வெளியானது கதாபாத்திர அறிமுக போஸ்டர்!

KH X RK பட கமல்ஹாசனின் பெயர் முதலில் வர காரணம் :

இந்த கூட்டணியானது இணைந்துள்ள நிலையில், கோலிவுட் சினிமாவில் மிக பிரம்மாண்ட படமாக இது இருக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இப்படத்தின் ப்ரோமோ மற்றும் போஸ்டர் போன்றவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ரசிகரப்ட்டவருகிறது. அந்த வகையில் கமல்ஹாசனின் பெயரே முதலில் இடம்பிடித்துள்ளது.

இதையும் படிங்க: KH x RK படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு – படத்தில் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?

இதற்கான காரணமாக இணையத்தில், கமல்ஹாசனின் பெயர் தனக்கு முன்னாள் வரவேண்டும் என ரஜினிகாந்த் தான் ஆசைபட்டாராம். அதுபோல இப்படத்தின் கதை மற்றும் யக்குனர் யார் என்பதை தீர்மானிப்பதற்கு ரஜினிகாந்திடம் பொறுப்பை கமல்ஹாசன் கொடுத்துவிட்டாராம். தற்போது இது குறித்த தகவலானது இணையத்தில் வைரலாகிவருகிறது.

KH X RK திரைப்படத்தின் ப்ரோமோ குறித்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் பதிவு:

இந்த புரோமோவில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் போன்ற பிரபலங்கள் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. காமெடி மற்றும் வித்தியாசமான வெளியான புரோமோ ரசிகர்களை கவர்ந்துவருகிறது. இதில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவருமே 90ஸ் கால கேங்ஸ்டர் காஷ்டியூமில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.