சிவகார்த்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி படம் – முக்கிய வேடத்தில் இணையும் பிரபல நடிகை?
Sivakarthikeyan And Venkat Prabhu Collaboration Film: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் பிரபல கதாநாயகனாக இருந்துவருகிறார். இவர் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணியில் புது படமானது உருவாகவுள்ள நிலையில், அதன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் பிரபல இயக்குநராக கலக்கிவருபவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) நடிப்பில், தி கோட் (The GOAT) என்ற திரைப்படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது இவருக்கு எதிர்பார்த்ததை விடவும் சிறப்பான வரவேற்பைக் கொடுத்திருந்தது. அந்த விதத்தில் இப்படத்தை அடுத்தாக சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) புது படத்தில் இணைவதாக அவர் தெரிவித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங் 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதியில் தொடங்கும் என கூறியிருந்த நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். இதனால் தற்போது சிவகார்த்திகேயன், தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் கூட்டணியில் (Sivakumar Murugesan) சேயோன் (Seyon) என்ற புது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தின் அறிவிப்பு புரோமோ சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது.
அந்த வகையில் வெங்கட் பிரபு மற்றும் சிவகார்த்திகேயனின் கூட்டணி படமானது SK27 திரைப்படமாக தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் பிரபல நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்படுகிறது.




இதையும் படிங்க: கமல்ஹாசன்- ரஜினிகாந்த் கூட்டணி பட புரோமோ வீடியோ எப்போது?- அறிவிப்பு இதோ!
சிவகார்த்திகேயனின் புது படத்தில் இணையும் பிரபல நடிகை :
நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி படமானது, அறிவியல் புனைக் கதைகளை மையமாக கொண்டு உருவாகவுள்ளதாம். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக லோகா படத்தில் நடித்த கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் ஹீரோ என்ற படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!
இதையடுத்து 2வது முறையாக மீண்டும் இணைகிறது. அந்த வகையில் இவர்களுடன் நடிகை ரம்யா நம்பீசன் மிக முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் தமிழில் சேதுபதி, குள்ளநரி கூட்டம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்திகேயன் – வெங்கட் பிரபு கூட்டணி படம் குறித்த வைரலாகும் பதிவு:
#RamyaNambessan officially confirms through her insta that she is part of #SivaKarthikeyan – #VenkatPrabhu film🌟
Buzz is that Ramya plays the mother of Sivakarthikeyan (She might feature as mother, while SK is Kid in the film)
KalyaniPraiyadharshan plays SK’s pair♥️. Pre… pic.twitter.com/Wik3PWDfxU
— AmuthaBharathi (@CinemaWithAB) February 19, 2026
சிவகார்த்திகேயன் சேயோன் படத்தில் இணைந்து நடித்துவரும் நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் முடித்த கையேடு வெங்கட் பிரபுவின் படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படம் வரும் 2027ம் ஆண்டில் வெளியாகும் என கூறப்படுகிறது.