கார்த்தியின் கைதி 2 திரைப்படம் உருவாகிறதா? – இணையத்தில் வைரலாகும் தகவல்!
Kaithi 2 Movie Update: தமிழில் பிரபல கதாநாயகனாக இருந்துவருபவர் கார்த்தி. இவர் மார்ஷல் படத்தை அடுத்ததாக கைதி 2 படத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், லோகேஷ் கனகராஜ் அல்லு அர்ஜுனுடன் புது படத்தில் இணைந்துவிட்டார். இந்நிலையில் இப்படம் ஒத்திவைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.
நடிகர் கார்த்தியின் (Karthi) நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் வா வாத்தியார் (Vaa Vaathiyaar). இயக்குநர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் கடந்த 2026 ஜனவரி 14ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி (Krithi Shetty) இணைந்து நடித்திருந்தார். இப்படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருந்தது. இதையடுத்து இயக்குநர் தமிழ் (Tamizh) இயக்கத்தில், மார்ஷல் (Marshal) என்ற படத்தில் கார்த்தி நடித்துவருகிறார். இந்நிலையில் இப்படத்தை அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் கைதி 2 (Kaithi 2) படத்தில் இணையவுள்ளார் என கூறப்பட்ட நிலையில், அவர் தற்போது அல்லு அர்ஜுனின் (Allu Arjun) 23வது படத்தை இயக்கவுள்ளார்.
இந்நிலையில் கைதி 2 படமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் சமீபத்தில் கைதி 2 படமானது உருவாகவுள்ளதாக இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: ரத்தம் தெறிக்க.. வெளியானது யாஷின் ‘டாக்சிக்’ படத்தின் அதிரடி டீசர்!
கார்த்தியின் கைதி 2 திரைப்படம் :
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கூட்டணியில் கைதி படம் கடந்த 2019ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து இதன் பாகம் 2 உருவாகவுள்ளதகவும் கூறப்பட்டிருந்தது. பின் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக படத்தில் நடிக்க சென்ற நிலையில், அதை தொடர்நது இப்படத்தை இயக்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புது படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில் தற்போது இணையத்தில் பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: எனது வாழ்நாளிலே அப்படியொரு காட்சியில் நடிப்பேன்னு நினைக்கல- விஜய் சேதுபதி ஓபன் டாக்!
அது என்னவென்றால் “டில்லி” என்ற டைட்டிலில் 30 நொடிகளுக்கு டீசர் ஒன்றிற்கு சென்சார் செய்யப்பட்டுள்ளது. இது கைதி படத்தை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ள நிலையில், இது கைதி 2 படத்திற்கான அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. கைதி படத்தில் கார்த்தி டில்லி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், நிச்சயமாக கைதி 2 படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.
கைதி 2 திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:
Dream Warrior pictures has censored a video teaser titled – “Dilli” 👀
What’s brewing up😳🤞 pic.twitter.com/cmOqyNKQE6— AmuthaBharathi (@CinemaWithAB) February 19, 2026
கார்த்தியின் கைதி 2 படமானது எப்போது உருவாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதன் முதல் பாகம்தான் லோகேஷ் கனகராஜிற்கு எதிர்பார்த்த உச்சத்தை கொடுத்திருந்த நிலையில், மீண்டும் இந்த கூட்டணி எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவருகின்றனர். அதுகுறித்து சிறப்பான அறிவிப்பு வரும் 2026 மார்ச் 14ம் தேதியில் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.