வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தின் நிலை என்ன? வைரலாகும் தகவல்
Venkat Prabhu and Sivakarthikeyan Movie Update: தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இயக்குநராக வலம் வருகிறார் வெங்கட் பிரபு. இவர் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்க உள்ள நிலையில் அந்தப் படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதுவரை 25 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி இறுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 25-வது படமாக வெளியானது தான் பராசக்தி படம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் தற்போது நல்ல கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்தப் படத்திற்கு முன்னதாகவே மதராஸி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே நடிகர் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு உடன் இணைவது தொடர்பான அறிவிப்பு வெளியானது. இதன் காரணமாக அவர் மதராஸி படத்தினை முடித்த உடன் வெங்கட் பிரபு படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்திற்காக இயக்குநர் சுதா கொங்கரா உடன் இணைந்தார். இதன் காரணமாக பராசக்தி படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது சிவகார்த்திகேயன் தனது 26-வது படமான சேயோன் படத்திற்காக இயக்குநர் சிவகுமார் முருகேசன் உடன் கூட்டணி வைத்துள்ளார். இந்த முறையும் வெங்கட் பிரபு உடன் கூட்டணி இல்லை என்பதால் படம் நடக்குமா இல்லையா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது.




வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயன் படத்தின் நிலை என்ன?
இந்த நிலையில் சினிமா வட்டாரங்களில் தற்போது தகவல் ஒன்று பரவி வருகின்றது. அதன்படி வெங்கட் பிரபு சிவகார்த்திகேயனை வைத்து இயக்க உள்ள சயின்ஸ் ஃபிக்ஷன் படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க உள்ளதாகவும் இவர்களுடன் ரம்யா நம்பீசனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவிக்கின்றது. இந்த தகவல் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… லோகா சாப்டர் 2 படத்தின் ஷூட்டிங் எப்போது? வைரலாகும் கல்யாணி பிரியதர்ஷன் பேச்சு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
— Director #VenkatPrabhu is set to helm a Sci-Fi film starring #Sivakarthikeyan 🚀🎬
— #KalyaniPriyadarshan will be playing the female lead opposite SK in this project. 💫
— Talks are also underway with #RamyaNambeesan, who appeared in Sethupathi, to play a crucial role in the… pic.twitter.com/QuiasgeSsG
— Movie Tamil (@_MovieTamil) February 18, 2026
Also Read… சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஹே ராம் படம் வெளியாகி 26 ஆண்டுகள் நிறைவு