Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Venkat Prabhu: மங்காத்தா ரீயூனியன்.. அஜித் குமாரை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

Venkat Prabhu Met Ajith kumar In Dubai: கோலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக இருந்துவருபவர் வெங்கட் பிரபு. இவர் இன்று 2026 பிப்ரவரி 8ம் தேதியில் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். அஜித் துபாயில் கார் ரேஸ் பயிற்சியில் இருந்துவரும் நிலையில், அவரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

Venkat Prabhu: மங்காத்தா ரீயூனியன்.. அஜித் குமாரை சந்தித்த இயக்குநர் வெங்கட் பிரபு!
வெங்கட் பிரபு மற்றும் அஜித் குமார்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Feb 2026 15:25 PM IST

தமிழில் பிரபல இயக்குநராக இருப்பவர் வெங்கட் பிரபு (Venkat Prabhu). இவர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முதல் அஜித் குமார் (Ajith Kumar) உட்பட பல்வேறு பிரபலங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அந்த விதத்தில் இவர் இறுதியாக தளபதி விஜய்யின் தி கோட் (The GOAT) என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் தளபதி விஜய் ரெட்டை வேடத்தில் நடித்திருந்த நிலையில், ரசிகர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த படமானது தளபதி விஜய்க்கு மிக பிரம்மாண்ட வரவேற்பை கொடுத்திருந்தது. இப்படத்தை அடுத்ததாகதான் தளபதி விஜய், இறுதி படமாக ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை கொண்டு புது படத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்திருந்தார். இப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் இவர் இன்று 2026 பிப்ரவரி 08ம் தேதியில் அஜித் குமாரை நேரில் சந்தித்துள்ளார். நடிகர் அஜித் குமார் துபாயில் (Dubai) கார் ரேஸ் பயிற்சியில் ஈடுபட்டுவரும் நிலையில், அவரை நேரில் வெங்கட் பிரபு சந்தித்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணி படத்தின் கதை இதுவா?- வைரலாகும் தகவல்!

வெங்கட் பிரபு மற்றும் அஜித் குமார் சந்திப்பு குறித்து வைரலாகும் பதிவு:

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று 2026 பிப்ரவரி 07ம் தேதியில், நடிகர் அஜித் குமாரை நேரில் சந்தித்து அவரின் பயிற்சிக்கு உற்சாகமளித்திருந்தார். இந்நிலையில் அதைத் தொடர்ந்து இன்று இயக்குநர் வெங்கட் பிரபு அவரை நேரில் சந்தித்துள்ள நிலையில், இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: வித் லவ் படத்தை பார்த்து ரொம்பவே ரசித்தேன் – பகவந்த் கேசரி பட இயக்குநர் பாராட்டு!

சிவகார்த்திகேயன் மற்றும் வெங்கட் பிரபு இருவரின் கூட்டணியில் புது படமானது உருவாகவுள்ள நிலையில், அந்த படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகளுக்காக துபாய் சென்றுள்ளதாகவும், அப்போதுதான் அஜித் குமாரை இருவரும் சந்தித்துள்ளனர் என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

அஜித் குமார் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி :

ஜித் குமார் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணியில் மங்காத்தா என்ற படமானது வெளியாகியிருந்தது. கடந்த 2011ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இதையடுத்து இந்த 2026 ஜனவரி 23ம் தேதியில் இப்படமானது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது. ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட இப்படமானது சூப்பர் ஹிட் வரவேற்பை பெற்று சுமார் ரூ 10 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இந்த கூட்டணியானது மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.