AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணி படத்தின் கதை இதுவா?- வைரலாகும் தகவல்!

Sivakarthikeyan - Sivakumar Murugesan Movie Plot: நடிகர் சிவகார்திகேயன் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் புதிதாக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுவரும் நிலையில், அதன் கதைக்களம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிவகார்த்திகேயன் – சிவகுமார் முருகேசன் கூட்டணி படத்தின் கதை இதுவா?- வைரலாகும் தகவல்!
சிவகார்த்திகேயன் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 08 Feb 2026 13:45 PM IST

கோலிவுட் சினிமாவில் ஆரம்பத்தில் துணை நடிகர் மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்து, மக்களிடையே பிரபலமானவர் சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan). இவர் தற்போது ஒரு லீட் கதாநாயகனாக வளர்த்துள்ளார். தொடர்ந்து நகைச்சுவை மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்துவந்த இவர், தற்போது முழுமையாக ஆக்ஷன் மற்றும் பிரம்மாண்ட பட்ஜெட் கதைக்களத்தில் நடிக்க தொடங்கியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான படம் பராசக்தி (Parasakthi). இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான கதையில் வெளியான இப்படம், இவருக்கு கலவையான விமர்சனங்களைக் கொடுத்திருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா (Sreeleela) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது கடந்த 2026 ஜனவரி 10ம் தேதியில் வெளியாகியிருந்தது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் இயக்குநர் வெங்கட் பிரபு (Venkat Prabhu) இயக்கத்தில் SK26 படத்தில் இணைவதாக கூறப்பட்ட நிலையில், இதன் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் தனது தயாரிப்பின் கீழ் உருவான தாய் கிழவி (Thaai Kizhavi) பட இயக்குநருடன் புது படத்தில் இணையவுள்ளாராம். தற்போது இந்த படத்தின் கதை குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ‘கர’ படத்தின் டப்பிங் பணியை முடித்த தனுஷ்? – இணையத்தில் வைரலாகும் தகவல்!

சிவகார்த்திகேயன் மற்றும் சிவகுமார் முருகேசன் படத்தின் கதை :

தாய் கிழவி என்ற படத்தின் மூலம் இயக்குநராக நுழைந்தவர் சிவகுமார் முருகேசன். இப்படம் இன்னும் வெளியாகாத நிலையில், சிவகார்த்திகேயனுடன் புது படத்தில் இணைந்துள்ளாராம். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படும் நிலையில், இதன் புரோமோ ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: முட்ட கலக்கி.. கென் கருணாஸின் ‘யூத்’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு!

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மதுரை மாவட்டத்தை சேர்ந்த இளைஞனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்தின் கதை மதுரையில் உள்ள கிராமப்புற பின்னணியை அடிப்படையாகக் கொண்ட இந்த அமைப்பு, ஒரு பிரமாண்டமான கோயில் திருவிழா போன்ற பேமிலி பொழுதுபோக்கு கதைக்களத்தில் தயாராகவுள்ளதாம். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

சிவகார்த்திகேயனின் புது படம் குறித்து வைரலாகும் பதிவு :

கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பின் கிராமத்து பின்னணி கதைகொண்ட படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் அறிவிப்புகள் வரும் 2026 பிப்ரவரி 17ம் தேதியில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே நாளில் சிவகார்த்திகேயனின் புது படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகும் என வட்டாரங்கள் கூறுகிறது.

Follow Us