Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Mamitha Baiju: ‘நாளை நாளை பாடல் ட்ரோல் குறித்த கேள்வி?’.. வேடிக்கையை பதிலளித்த மமிதா பைஜூ!

Mamitha Baiju About Trolls: மமிதா பைஜூ, தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். ஜன நாயகன் பட ஆடியோ லாஞ்சில், எல்லா புகழும் என்ற பாடலை பாடி இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டிருந்த நிலையில், அது குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

Mamitha Baiju: ‘நாளை நாளை பாடல் ட்ரோல் குறித்த கேள்வி?’.. வேடிக்கையை பதிலளித்த மமிதா பைஜூ!
மமிதா பைஜூImage Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Updated On: 07 Feb 2026 13:11 PM IST

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நுழைந்து பின், கதாநாயகியாக பிரபலமானவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவர் தற்போது தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக படங்களில் நடித்துவருகிறார். இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் உருவாகிவருகிறது. இவர் தளபதி விஜய்யுடன் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார். இப்படமானது இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் முதல் பிரம்மாண்ட பட்ஜெட் படமாகும். இதில் மமிதா பைஜூவின் காதலனாக நடிகர் டீஜெய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படமானது சென்சார் பிரச்சனையின் காரணமாக இன்னும் வெளியிடப்படாமல் இருக்கும் நிலையில், இதற்கான பணிகளும் நடைபெற்றுவருகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் மலேசிய ஆடியோ லாஞ்சின்போது நடிகை மமிதா பைஜூ, தளபதி விஜய்யின் “அழகிய தமிழ்மகன்” படத்தில் இடம்பெற்றிருந்த “எல்லா புகழும்” (Ella Pugazhum) என்ற பாடலை பாடியிருந்தார்.

இந்த படலானது இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டுவந்த நிலையில், இது குறித்து மமிதா பைஜூ எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இவரிடம், அந்த ட்ரோல் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மமிதா சொன்ன பதில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் – கமல்ஹாசன் கூட்டணி படம்.. ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

தனது ட்ரோல் குறித்து மமிதா பைஜூ சொன்ன வேடிக்கையான பதில் :

அந்த சந்திப்பில் நடிகை மமிதா பைஜூவிடம் செய்தியாளர் ஒருவர், “இணையத்தில் உங்களை குறித்த பல நகைச்சுவையான ட்ரோல் வீடியோ வெளியாகிவருகிறது அது குறித்து நீங்க என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை மமிதா பைஜூ, “நாளை நாளை பாடல் குறித்த ட்ரோலா?, அது குறித்த எனக்கு கவலை இல்லை, வேடிக்கைதான். அனைவரும் வேடிக்கையாக எடுத்துக்கொண்டனர், நானும் அப்படியே எடுத்துக்கொண்டேன்” என அவர் அதில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ‘எனக்கு சினிமாவில் அவரின் டான்ஸ் ரொம்பவே பிடிக்கும்’- சாய் பல்லவி சொன்ன நடிகர் யார் தெரியுமா?

ட்ரோல் குறித்து நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ பதிவு:

நடிகை மமிதா பைஜூ தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபலமான இளம் நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் தனுஷ், சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். மேலும் தற்போது மலையாளத்திலும் புது படத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துவருகிறார். மேலும் ஜன நாயகன் படத்தின் ரிலீசிற்கு பின், இவருக்கு மேலும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.