Mamitha Baiju: விஜய் சாருடன் நடித்தது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை- மமிதா பைஜூ ஓபன் டாக்!
Mamitha Baiju About Thalapathy Vijay: தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவர் தளபதி விஜய் முதல் சூர்யா வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்தது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை என அவர் பேசியுள்ளார்.

மலையாள சினிமாவின் மூலம் திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகமானவர் மமிதா பைஜூ (Mamitha Baiju). இவரின் முன்னணி நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டில் வெளியான படம் பிரேமலு (Premalu). இந்த படத்தின் மூலம் தென்னிந்தியாவில் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஏற்கனவே ரெபெல் (Rebel) என்ற படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இணைந்து நடித்திருக்கிறார். இந்த படங்களின் வரிசையில் இவருக்கு தமிழில் முன்னணி நாயகியாக அங்கீகாரம் கொடுத்த திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த படத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு (Pradeep Ranganathan)ஜோடியாக நடித்திருந்தார். இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
அந்த வகையில் நடிகை மமிதா பைஜூ, தளபதி விஜயின் (Thalapathy Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) மற்றும் சூர்யாவிற்கு (Suriya) ஜோடியாக சூர்யா46 (Suriya46) போன்ற படங்களிலும் நடித்துள்ளார். இதில் சூர்யா46 படத்தின் ஷூட்டிங் மட்டும் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய மமிதா பைஜூ, தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்தது தனது மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்துள்ளார்.




இதையும் படிங்க : ஹாட்ரிக் வெற்றியா? – பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட விமர்சனம்!
ஜன நாயகன் படத்தில் நடித்தது குறித்து பெருமிதம்
டியூட் படம் தொடர்பாக சமீபத்தில் மலையாள நேர்காணல் ஒன்றில் மமிதா பைஜூ பேசியிருந்தார். அதில் தொகுப்பாளர் விஜய் சாரின் கடைசி படத்தில் நடித்ததை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் ? என கேள்விகளை கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த மமிதா பைஜூ, “நான் முன்பே ஒரு நேர்காணலில் தளபதி விஜய் சாரி கடைசி படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுவதாக தெரிவித்திருந்தேன். அந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தபோது என்னால் எதுவுமே தெளிவாக பேசமுடியவில்லை, அவ்வளவு மகிழ்ச்சியில் உணர்ந்தேன்.
இதையும் படிங்க: ‘பென்ஸ்’ திரைப்படத்தின் ஷூட்ங்கில் மீண்டும் இணைந்த நிவின் பாலி.. வைரலாகும் பதிவு!
மேலும் இப்போது ஜன நாயகன் திரைப்படத்தில் இணைந்திருப்பதால், நான் உண்மையிலே மிகவும் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த ஜன நாயகன் படத்தில் விஜய் சாருடன் இணைந்து நடித்ததை, எனது சினிமா கேரியரில் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாகும்” என்று நடிகை மமிதா பைஜூ அந்த நேர்காணலில் ஓபனாக பேசியுள்ளார்.
மமிதா பைஜூ வெளியிட்ட பதிவு :
A moment!!✨🥹#Thalapathy69Poojai♋️
04.10.2024#Thalapathy69 @actorvijay sir@KvnProductions #HVinoth@anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @hegdepooja @thedeol @itsNarain #Grateful ♥️ pic.twitter.com/UyuWr8VF7d— Mamitha Baiju (@_mamithabaiju) October 4, 2024
இந்த ஜன நாயகன் படத்தில் நடிகை மமிதா பைஜூ மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், வரும் 2026ம் ஆண்டு ஜனவரின் 9ம் தேதியில் உலகமெங்கும் இப்படம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.