Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sarathkumar: சரத்குமார் சாரின் இளமையின் ரகசியம் இதுவா? பிரதீப் ரங்கநாதன் போட்டுடைத்த உண்மை!

Sarathkumar Youth Secret: சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் டியூட் படமானது வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இதில் நடிகர் சரத்குமாரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், சரத்குமாரின் இளமையின் ரகசியம் பற்றி பேசியுள்ளார். அது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Sarathkumar: சரத்குமார் சாரின் இளமையின் ரகசியம் இதுவா? பிரதீப் ரங்கநாதன் போட்டுடைத்த உண்மை!
சரத்குமார் இளமை ரகசியம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 15 Oct 2025 09:30 AM IST

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம்தான் டியூட் (Dude). இந்த படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்க, பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ (Mamitha Baiju) இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிகர் சரத்குமாரும் (Sarathkumar) நடித்துள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் நடித்திருந்த பல படங்ககள் சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அதை தொடர்ந்து தற்போது, படங்ககளில் முக்கிய வேடங்களில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார். இவருக்கு வெற்றி திரைப்படமாக போர் தொழில் (Por Thozhi), 3BHK போன்ற திரைப்படங்ககள் அமைந்துள்ளது.

தற்போது 71 வயதாகியும், சினிமாவில் முன்னணி நடிகராக கலக்கிவருகிறார். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதனின் டியூட் படத்திலும் அவருக்கு தாய் மாமன் வேடத்தில் நடித்துள்ளாராம். இந்நிலையில் சமீபத்தில் டியூட் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதீப் ரங்கநாதன், சரத்குமாரின் இளமை ரகசியம் பற்றியும், அவரின் நடிப்பு திறமை பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க: ஷூட்டிங் ஆரம்பிக்கிற ஒரு வாரம் முன்னாடிதான் பைசன் கதை படிச்சேன் – நடிகர் துருவ் விக்ரம்

சரத்குமார் குறித்து பிரதீப் ரங்கநாதன் சொன்ன விஷயம்

அந்த நிகழ்ச்சியின்போது மேடையில் பேசிய பிரதீப் ரங்கநாதன், நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை, நான் பார்த்துவளர்ந்த நடிகருடன் இணைந்து நடிப்பேன் என்று. மேலும் டிராகன் படத்தில் அர்ஜுனா அர்ஜுனா என்ற பாடலை வைப்பதற்கு அனுமதித்ததற்கு ரொம்ப நன்றி சார். மேலும் சரத்குமார் சாரை முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்ததும், நான் நினைத்த ஒன்று அவருக்கு எத்தனை வயது இருக்கும் என்றுதான். மேலும் நானே அவரிடம் கேட்டேன் சார் உங்களுக்கு எத்தனை வயது என்று, அதற்கு சரத்குமார் சாரும், என்னிடம் ஒரு நம்பரை சொன்னாரு அதை கேட்டதும் எனக்கு ஷாக் ஆகிவிட்டது.

இதையும் படிங்க: #Love சீரிஸிக்காக ஒன்றிணைந்த அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி!

அதன் பிறகு கேட்டேன் சார் உங்களின் இளமையின் சீக்ரெட் என்ன என்று கேட்டேன். அதற்கு சரத்குமார் சார் என்னிடம், நானா தினமும் காலை பீட்ரூட் ஜூஸ் குடிப்பேன் என கூறினார். அவர் என்னிடம் கூறியதில் இருந்து நானும் தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ் குடித்துவருகிறேன். மேலும் அவரின் வயது வரும்போது நானும் அவரைப்போல இருந்தேன் என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்று பிரதீப் ரங்கநாதன் கலகலப்பாக மேடையில் பேசியிருந்தார்.

டியூட் திரைப்படத்தின் ட்ரெய்லர் தொடர்பாக பிரதீப் ரங்கநாதன் வெளியிட்ட பதிவு :

இந்த டியூட் திரைப்படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. மாறுபட்ட காதல் கதைக்களத்தில் தயாராகியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.