Dude: ஹாட்ரிக் வெற்றியா? – பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட விமர்சனம்!
Pradeep Ranganathan's Dude Movie Review: தமிழ் சினிமாவில் இளம் நடிகராக அனைவரையும் கவர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியுள்ள படம்தான் டியூட். இப்படமானது இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியி முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த எக்ஸ் விமர்சனம் குறித்து பார்க்கலாம்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் (Predeep Ranganathan) மற்றும் மமிதா பைஜூவின் (Mamitha Baiju) காம்போவில் மிக பிரம்மாண்டமாக வெளியாகியிருக்கும் படம்தான் டியூட் (Dude). இந்த திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் (Keerthishwaran) இயக்கியிருக்கும் நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்ற தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த டியூட் கடந்த 2025 மார்ச் மாதத்தில் தொடங்கிய நிலையில், கிட்டத்தட்ட 6 மாதங்களுக்குள் படமாக்கி வெளியிடப்பட்டுள்ளது. இந்த படமானது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்த நிலையில், இன்று 2025 அக்டோபர் 17ம் தேதியில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்திருக்கும் நிலையில், பாடல்களும் சூப்பர் ஹிட்டாகினது. அந்த வகையில் இப்படமானது திரையரங்குகளில் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றுவருகிறது.
இந்த படமானது எமோஷனல், வேடிக்கை , காதல் மற்றும் திருப்பங்கள் நிறைந்த கதைக்களத்துடன் வெளியாகியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்காக ரசிகர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் விமர்சங்கள் குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க : ரஜினிகாந்த் சாருடன் படம்… ஆனால் அவர் என்னை நம்பணும்- மாரி செல்வராஜ் சொன்ன விஷயம்!
பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படத்தின் எக்ஸ் விமர்சனங்கள் :
#Dude First Half – So Good👌🔥
– Pradeep & Mamitha Combo working at a High note♥️
– Each & every scene filled with some exciting elements, eventhough the plot is predictable after a point of time🤩
– Sarathkumar’s character was one of the Highlight element🌟
– Oorum Blood song… pic.twitter.com/jmuATHSCR5— AmuthaBharathi (@CinemaWithAB) October 17, 2025
இந்த டியூட் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூவின் ஜோடி காம்போ மிகவும் அருமையாக அமைந்துள்ளதாம். மேலும் இந்த படத்தின் முதல் பாதியில் ஒவ்வொரு காட்சிகளும் மிகவும் அற்புதமான அம்சங்களால் நிறைந்துள்ளதாம். மேலும் குறிப்பிட்ட நேரத்திலே கதையை கணிக்கக்கூடியதாக அமைந்தாலும்,வேடிக்கையாக படம் ஈர்த்துவருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதில் நடிகர் சரத்குமாரின் கதாபாத்திரம் மிகவும் அருமையாகவும், வித்தியாசமாகவும் அமைத்துள்ளதாம்.
டியூட் படத்தில் இடம்பெற்ற புஷ்பா 2 பட பாடல் :
Blockbuster ante blockbuster first half #DudeMovie #Dude@SaiAbhyankkar you are a drug how did you elevate the hero crying in bathroom and him turning back in the interval pic.twitter.com/VOdGE8HpB1
— jay. (@jayanthszn) October 17, 2025
இந்த டியூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ இருவருக்கும் திருமணம் நடைபெறுவதாக இருக்கும் காட்சி ஒன்றில், நடிகை மமிதா பைஜூ திருமண மேடையில் புஷ்பா 2 படத்தில் வெளியான “பீலிங்ஸ்” என்ற பாடலுக்கு நடனமாடுவது போல உள்ள காட்சியானது திரையரங்குகளையே அதிரவைத்துள்ளது.
சாய் அபயங்கரின் இசையமைப்பு மற்றும் இயக்குநரின் இயக்கம் எப்படி இருக்கு :
#dude : 1st half done 👍🏼 @pradeeponelife Mass ya nee !! Mamitha 🥰🙌🏼 !! @SaiAbhyankkar bgm 🔥🔥🔥 Overall an massive 1st half waiting for second half 💥 pic.twitter.com/PKZwEQIu1D
— ꜰʀᴇᴀᴋɪɴ 🥃🚬😼ᴴʸᵖᵉᵈ ᶠᵒʳ ᴰᵘᵈᵉᵉ! (@frexkinefx2) October 17, 2025
இந்த படமானது சாய் அபயங்கர் இசையமைப்பாளராக தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அறிமுகமாகும் முதல் படமாகும். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் ஏற்கனவே இணையதளங்களில் வைரலாகிவரும் நிலையில், திரையரங்குகளில் பின்னணி இசையும் சரி, பாடல்களின் வைப் மிகவும் அருமையாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் டயலாக் ஒவ்வொன்றும் மிகவும் மாஸாக இயக்குநர் கீர்த்திஸ்வரன் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : மமிதா என்னை உண்மையாகவே உதைச்சாங்க.. அதனால் என்னுடைய போன் நொறுக்கிடுச்சி.. பிரதீப் ரங்கநாதன் கலகல பேச்சு!
மொத்தத்தில் டியூட் திரைப்படத்தை திரையரங்கு சென்று பார்க்கலாமா?
இந்த டியூட் திரைப்படம் முழுவதுமாக வேடிக்கை, எமோஷனல், திருப்பங்கள், நம்பகத்தன்மை மற்றும் காதல் போன்ற மாறுபட்ட எமோஷ்னங்கள் நிறைந்த கதைக்களமாக வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படமானது அனைத்து வகையான ரசிகர்களுக்கும் பார்க்கும் வண்ணம் அமைந்துள்ள படமாக வெளியாகியிருக்கிறது. நிச்சயமாக திரையரங்கு சென்று பார்க்கும் அளவிற்கு டியூட் திரைப்படமானது என்பது குறிப்பிடத்தக்கது.