Dude: நாளை வெளியாகும் டியூட்.. திரையரங்குகளுக்கு கோரிக்கை விடுத்த படக்குழு!
Dude Film Crew Requests Theaters: தமிழ் சினிமாவில் இளம் நாயகனாக ரசிகர்களை கவர்ந்துவருபவர் பிரதீப் ரங்கநாதன். இவரின் நடிப்பில் வெளியாகவும் திரைப்படம்தான் டியூட். இப்படத்தை இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கியுள்ளார். இப்படம் நாளை 2025 அக்டோபர் 17ல் வெளியாகும் நிலையில், திரையரங்குகளுக்கு படக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கோலிவுட் சினிமாவில் அறிமுக இயக்குநரான கீர்த்திஸ்வரன் (Keerthiswaran) இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ள படம்தான் டியூட் (Dude). இதில் முன்னணி நாயகனாக பிரதீப் ரங்கநாதன் (Pradeep Ranganathan) நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக இளம் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இவர்கள் இருவரின் ஜோடி இப்படத்தில்தான் முதல் முறையாக இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டியூட் படத்தை பிரபல தெலுங்கு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். இந்த படமானது எமோஷனல , ஆக்ஷ்ன் மற்றும் காதல் போன்ற மாறுபட்ட கதைக்களத்தில் தயாராகியுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் தற்போதுவரையிலும் இணையத்தில் வைரலாகிவரும் நிலையில், நாளை 2025 அக்டோபர் 17ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்த டியூட் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு படக்குழு சிறப்பான கோரிக்கை ஒண்றை விடுத்துள்ளது. அது என்னவென்றால், இந்த படம் வெளியாகும்போது, திரையரங்குகளில் உள்ள ஆடியோ செயலி (Audio processor) நிலையை குறைந்தபட்சம் 5.5 மதிப்பில் பராமரிக்கப்பட வேண்டும் என படக்குழு கோரிக்கை வைத்துள்ளது.




இதையும் படிங்க : அனிருத்தின் பர்த்டே.. ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘ஜன நாயகன்’ படக்குழு!
திரையரங்குகளுக்கு கோரிக்கை விடுத்தது டியூட் படக்குழு வெளியிட்ட பதிவு:
A kind request to all the venues playing #DUDE.
To ensure a great cinematic experience, we request that the Audio Processor Level for all screenings be maintained at a value of Minimum 5.5
Let’s enjoy the film at its best.@PicturesPVR @INOXMovies @SPICinemas @Cinemark… pic.twitter.com/X8aK0sEo0R
— Mythri Movie Makers (@MythriOfficial) October 16, 2025
பிரதீப் ரங்கநாதனின் டியூட்
பிரதீப் ரங்கநாதனின் இந்த டியூட் படமானது அதிரடி காதல் மற்றும் ஆக்ஷ்ன் நிறைந்த படமாக தயாராகியுள்ளது. இதில் பிரதீப் ரங்கநாதனுடன் மமிதா பைஜூ, சரத்குமார், மற்றும் ரோகிணி போன்ற பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படமானது சுமார் ரூ 60 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ளதாக கூறப்படும் நிலையில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
இதையும் படிங்க: அந்தப் படத்தின் கதையை படுத்துக்கொண்டே தான் கேட்டேன் – நடிகர் யோகி பாபு
இந்த திரைப்படமானது தெலங்கானா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் காலை 6 மணி காட்சிகள் முதல் வெளியாகிறது. ஆனால் தமிழகத்தில் டியூட் திரைப்படமானது காலை 9 மணி காட்சிகள் முதல் திரியரங்குகளில் திரையிட தமிழக அரசு அனுமதித்துள்ளது.
பிரதீப் ரங்கநாதனின் நடிப்பில் இறுதியாக டிராகன் என்ற படமானது வெளியாகியிருந்தது. இந்த படமானது வெளியாகி சுமார் ரூ 150 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருந்தது. தனது இரண்டாவது படத்திலே சுமார் ரூ 150 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகவும் பிரபலமானார். அதுபோல் இந்த டியூட் படமும் அதிகம் வசூல் பெற்று வெற்றி திரைப்படமாக அமையும் என ஏதிர்பார்க்கப்படுகிறது.