விஷ்ணு விஷாலின் ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றியது பிரபல நிறுவனம் – வைரலாகும் போஸ்ட்
Aaryan Movie: நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது தொடர்ந்து படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் பெற்றுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் நடிகர்களின் பட்டியளில் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). இவரது நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் ஓஹோ எந்தன் பேபி. இதில் நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நாயகனாக நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை தயாரித்தது மட்டும் இன்றி இதில் நடிகர் விஷ்ணு விஷால் நீண்ட கேமியோ ரோலில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. திரையரங்குகளில் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் ஓஹோ எந்தன் பேபி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஓஹோ எந்தன் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் நடிகர் விஷ்ணு விஷால் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதன்படி விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது இரண்டு வானம், மோகன்தாஸ், ஆர்யன் மற்றும் கட்டா குஸ்தி 2 ஆகியப் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் இரண்டு வானம், மோகன்தாஸ் மற்றும் ஆர்யன் படங்களின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் சமீபத்தில் ஆர்யன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்தது.




ஆர்யன் படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்:
இந்த நிலையில் இந்த ஆர்யன் படத்தை இயக்குநர் பிரவீன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த ஆர்யன் படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடிகர்கள் ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன், வாணி போஜன் உட்பட பலர் நடித்துள்ளனர். படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
Also Read… விறுவிறுப்பாக நடைபெறும் AK 64 படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா? வைரலாகும் தகவல்
நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
First clue tomorrow. #Aaryan pic.twitter.com/GxOGAIKAsB
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 29, 2025
Also Read… ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது ஒருநாளும் நடக்காது – மாதம்பட்டி ரங்கராஜ்