இது ராட்சசன் இல்லை.. இது ஆர்யன் – வெளியானது விஷ்ணு விஷால் பட டீசர்!
Aaryan Movie Tamil Teaser | நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ஆர்யன். தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது. இந்த நிலையில் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால் (Actor Vishnu Vishal). இவர் இறுதியாக இவர் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகம் ஆன ஓஹோ எந்தன் பேபி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தார். மேலும் இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் அவரது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்தப் படத்தை தயாரித்து இருந்தார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதே போல ஓடிடியில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது தொடர்ந்து 4 படங்கள் உருவாகி வருகின்றது. ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானரில் உருவாகி வருகின்றது.
இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள ஆர்யன் படத்தின் டீசரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இயக்குநர் பிரவீன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ளார். மேலும் நடிகர் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் நடிகர்கள் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். மேலும் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூரியோஸ் சார்பாக நடிகர் விஷ்ணு விஷால் தான் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




ஆர்யன் படத்தின் டீசரில் காட்டப்பட்டது என்ன?
இந்தப் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். தொடர் கொலைகள் நடைப்பெற்று வரும் நிலையில் அது எல்லா கொலைகளைப் போல இல்லாமல் வித்யாசமானதாக இருக்கிறது என்பது இந்த டீசரில் காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்தப் படத்தில் இருக்கும் கொலையாளி மற்ற சைக்கோ கொலையாளிகளைவிட வித்யாசமானவராக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இறுதியில் இந்தப் படத்தில் என்ன நடந்தது என்பது படத்தைப் பார்க்கும் போதே தெரியவரும். இந்தப் படம் வருகின்ற 31-ம் தேதி அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கின்றது.
Also Read… எனக்கு மிகவும் பிடித்த நடிகருடன் நடிச்சு இருக்கேன் – பள்ளிச்சட்டம்பி படம் குறித்து பேசிய கயாடு லோஹர்
விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
This is not Ratsasan.
This is – #AARYAN.Tamil Teaser ▶️ https://t.co/T8mxCksd1F
Telugu Teaser ▶️ https://t.co/pPqgdmya6aSee you in theatres on 31st OCTOBER. pic.twitter.com/P8Kt1hUTiC
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) September 30, 2025
Also Read… அந்த படத்திற்காக ஆவலாக காத்திருக்கிறேன்- நடிகை கயாடு லோஹர் பேச்சு!