Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஹார்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள ஹிருதயப்பூர்வம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!

Hridayapurvam Movie: மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் ஹிருதயப்பூர்வம். இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.

ஹார்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ள ஹிருதயப்பூர்வம் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ!
ஹிருதயப்பூர்வம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 28 Sep 2025 22:08 PM IST

நடிகர் மோகன்லால் (Actor Mohanlal) நடிப்பில் ஃபேமிலி செண்டிமெண்ட் ஃபீல் குட் படமாக வெளியானது ஹிருதயப்பூர்வம். இந்தப் படத்தை இயக்குநர் சத்யன் அந்திகாடு இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 28-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் மோகன்லால் உடன் இணைந்து நடிகர்கள் சங்கீதா மாதவன் நாயர், சங்கீத் பிரதாப், சித்திக், லூலா அலெக்ஸ், பாபு ராஜ், ஷபிதா ஆனந்த், பேசில் ஜோசஃப், நிஷான் நானையா மற்றும் ஜனார்தனன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர். இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆசீர்வாத் சினிமாஸ் சார்பாக பிரபல தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார். மேலும் படத்தில் கெஸ்ட் ரோலில் அவர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்து இருந்த நிலையில் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது போல பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படம் ஹார்ஸ்டார் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.

ஹிருதயப்பூர்வம் படம் எப்படி இருக்கு?

படத்தின் தொடக்கத்திலேயே பூனேவில் உயிரிழந்த ஆர்மி கர்னலில் இருதயம் கேரளாவில் இருதய நோயால் பாதிக்கப்பட்ட மோகன்லாலுக்கு வைப்பதற்காக எடுத்து வருகின்றனர். பின்பு ஆப்ரேஷன் முடிந்ததும் மோகன்லாலை அருகில் இருந்து பார்த்துக்கொள்ள மேல் நர்சான சங்கீத் பிரதாப்பை நியமிக்கிறார்கள்.

இப்படி இருக்கும் சூழலில் தனது கிளவுட் கிட்சனை பார்த்துக் கொண்டிருந்த மோகன்லாலை சந்திக்க உயிரிழந்த கார்னலின் மகள் மாளவிகா மோகனன் பார்க்க வருகிறார். அப்போது தனது திருமண நிச்சயத்திற்காக அழைப்பு வைக்கிறார். முதலில் மறுக்கும் மோகன்லால் பிறகு அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக பூனே செல்கிறார். அதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதே படத்தின் கதை.

Also Read… ஜூனியர் என்டிஆரின் தேவாரா 2 படம் குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

ஹிருதயப்பூர்வம் படம் குறித்து மோகன்லால் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? வைரலாகும் தகவல்