Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi: விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணி படத்தின் டைட்டில் இதுவா?

Puri sethupathi Movie Update: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தெலுங்கிலும் ஹீரோவாக படத்தில் அறிமுகமாகியுள்ளார். இதை இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கிவரும் நிலையில், இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

Vijay Sethupathi: விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணி படத்தின் டைட்டில் இதுவா?
விஜய் சேதுபதி மற்றும் பூரி ஜெகன்நாத் கூட்டணி படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 27 Sep 2025 20:38 PM IST

தமிழ் மக்களால் அன்புடன் மக்கள் செல்வன் என அழைக்கப்பட்டுவருபவர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) . இவரின் முன்னணி நடிப்பில் இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்கள் தமிழில் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் சினிமாவில் அங்கீகரிக்கப்படாத வேடத்தில் நடித்துவந்த இவர், தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியாகி வெற்றிபெற்ற திரைப்படம்தான் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருந்தது. பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்தபடத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி தெலுங்கு மொழியில் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார்.

இந்த புதிய படத்தை இயக்குநரும், தயாரிப்பளாருமான பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) இயக்கிவருகிறார். இந்த படமானது தற்காலிகமாக பூரிசேதுபதி (Purisethupathi) என ழைக்கப்பட்டி வருகிறது. மேலும் தற்போது இப்படத்தின் டைட்டில் தொடர்பான தகவல் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. விஜய் சேதுபதியின் தெலுங்கு அறிமுக படத்தின் டைட்டிலானது “ஸ்லம் டாக்” (Slum Dog) என கூறப்படுகிறது. இது எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது தொடர்பான தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : மண்வாசம் வீசும் கிராமத்து கதையில்.. தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் டிக்கெட் புக்கிங் தொடக்கம்!

பூரிசேதுபதி டைட்டில் டீசர் ரிலீஸ் தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பு :

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகிவரும் இப்படமானது, முற்றலும் வேறுபட்ட கதையில் தயாராகிவருகிறதாம். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக வாத்தி படத்தில் நடித்திருந்த நடிகை சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிகை தபு நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : எல்லாம் நாம பாக்குற பார்வையில தான் இருக்கு – பிக்பாஸ் தமிழ் சீசன் 9

இந்த புதிய படத்தின் டைட்டில் டி மற்றும் டீசர் 2025 செப்டம்பர் 28ம் தேதியில் வெளியாகவும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த டீசர் பதிவானது இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

விஜய் சேதுபதியின் புதிய படங்கள் :

விஜய் சேதுபதியின் நடிப்பில் கிட்டத்தட்ட 2 படங்கள் வீதம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடித்திருக்கும் ட்ரெயின் திரைப்படம் இறுதிக்கட்ட வெளிப்பாட்டில் உள்ளது. மேலும் இவர் இயக்குநர் மிஷ்கினுடன் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.