Bigg Boss Tamil 9: எல்லாம் நாம பாக்குற பார்வையில தான் இருக்கு – பிக்பாஸ் தமிழ் சீசன் 9
Bigg Boss 9 Tamil: தமிழக மக்கள் மிகவும் ஆவளுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இந்த நிலையில் இந்தப் படத்தின் 9-வது சீசன் தற்போது ஒளிபரப்பாக உள்ளது. இது தொடர்பான புது ப்ரோமோ வீடியோவை நிகழ்ச்சிக் குழு தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ரசிகரக்ளிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானதில் இருந்தே ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. 2017-ம் ஆண்டு முதல் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. இதுவரை 8 சீசன்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இதற்கு இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டது. இதனை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார். இந்த நிகழ்ச்சி முன்னதாக பிக்பாஸில் கலந்துகொண்டு வைரலான போட்டியாளர்களை மட்டுமே வைத்து ஒளிபரப்பப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகு என்பதைத் தாண்டி தொடர்ந்து ஓடிடியில் காணலாம் என்ற வாய்ப்பு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது. தொடர்ந்து தற்போது வெளிபரப்பாகும் சீசன்களும் ஹாட்ஸ்டார் ஓடிடியில் 24 மணி நேரமும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 8-வது சீசன் முதல் தொகுத்து வழங்குகிறார்.




புதிய புரோமோ வீடியோவை வெளியிட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி குழு:
இந்த நிலையில் தற்போது 9-வது சீசனுக்கான அறிவிப்பை பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்டுள்ளது. வருகின்ற 5-ம் தேதி அடோபர் மாதம் 2025-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து புரோமோ வீடியோவை நிகழ்ச்சி குழு வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குழு புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
எல்லாம் நாம பாக்குற பார்வையில தான் இருக்கு!! 😎
பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும். Bigg Boss Tamil Season 9 | Grand Launch – அக்டோபர் 5 மாலை 6 மணிக்கு ..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV… pic.twitter.com/yrcgkyJATt
— Vijay Television (@vijaytelevision) September 27, 2025
Also Read… வடசென்னை 2 எப்போது தொடங்குகிறது – சூப்பரான அப்டேட் கொடுத்த தனுஷ்!