யாரு மாற போறாங்க எப்படி மாற போறாங்கன்னு பாக்க பாக்க தான் புரியும் – பிக்பாஸ் தமிழ் சீசன் 9 புரோமோ இதோ!
Bigg Boss Tamil Season 9 : தமிழ் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்தே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து 8 சீசன்களாக வெற்றியடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 9-வது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெறும் நிகழ்ச்சி பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியை கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகினறது. அதன்படி இதுவரை 8 சீசன்கள் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பிரபலங்கள் பலரும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களுக்கு மக்களிடையே பிரபலம் மட்டும் இன்றி வெள்ளித்திரையில் நடிப்பதற்கான வாய்ப்பும் மிகவும் சுலபமாக கிடைப்பதால் பிரபலங்கள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தற்போது 9-வது சீசன் தொடங்க உள்ள தேதி குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி வருகின்ற அக்டோபர் மாதம் 5-ம் தேதி 2025-ம் ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரமாண்டமாக ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் எல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பது குறித்த தகவல்கள் அவ்வபோது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பான பிறகே உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 7 சீசன்களாக நடிகர் கமல் ஹாசன் நிகழ்ச்சியில் இருந்து விலகிய பிறகு 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது 9-வது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளார். இதனை நிகழ்ச்சி குழு அதிகாரப்பூர்வமான வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளது.




யாரு மாற போறாங்க எப்படி மாற போறாங்கன்னு பாக்க பாக்க தான் புரியும்:
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 ஒளிபரப்பாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நிகழ்ச்சி குழு புதிய புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி யாரு மாற போறாங்க எப்படி மாற போறாங்கன்னு பாக்க பாக்க தான் புரியும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
Also Read… ‘AK64’ படம் பற்றி சிறப்பான அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்.. மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்கள்!
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
யாரு மாற போறாங்க எப்படி மாற போறாங்கன்னு.. பாக்க பாக்க தான் புரியும்.. போக போக தான் தெரியும்..
Bigg Boss Tamil Season 9 | Grand Launch – அக்டோபர் 5 முதல்..😎 #BiggBossSeasonTamil9 #OnnumePuriyala #BiggBoss9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #VijayTV #VijayTelevision” pic.twitter.com/cB8sYlhMa5
— Vijay Television (@vijaytelevision) September 24, 2025
Also Read… Bison: சின்மயின் குரலில்… துருவ் விக்ரமின் பைசன் படத்திலிருந்து வெளியான ‘சீனிக்கல்லு’ பாடல்!