Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

GV Prakash: வாத்தி படத்திற்காக தேசிய விருது.. குடியரசு தலைவரின் கையால் விருதை வாங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார்!

GV Prakash Kumar Wins National Award: தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார். சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான வாத்தி என்ற படத்திற்காக, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

GV Prakash: வாத்தி படத்திற்காக தேசிய விருது.. குடியரசு தலைவரின் கையால் விருதை வாங்கிய ஜி.வி. பிரகாஷ் குமார்!
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் ஜி.வி. பிரகாஷ் Image Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 23 Sep 2025 19:02 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர் மற்றும் சிறந்த இசையமைப்பாளராக இருந்து வருபவர் ஜி.வி.பிரகாஷ் குமார் (G.V. Prakash Kumar). இவர் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி, தற்போது வரை பல படங்களுக்கு இசையமைத்து ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில், இதுவரை ஹீரோவாகவும் இவர் 25 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவாக பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2023ம் ஆண்டு தனுஷ் (Dhanush) நடிப்பிலும், இயக்குநர் வெங்கி அட்லூரியின் (Venky Atluri) இயக்கத்திலும் வெளியான படம் வாத்தி (Vaathi).

இந்த படமானது தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படமாக வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இப்படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது (National Film Award)அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : அவங்க என்னோட கூட பிறந்த அக்கா… ப்ரீத்தி அஸ்ரானி சொன்ன சுவாரஸ்ய சம்பவம்

இந்நிலையில் இன்று 2025 செப்டம்பர் 23ம் தேதியில் நடைபெற்ற, 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில், வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதைப் (Best Music Director Award) பெற்றுள்ளார். இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் கையால் தேசிய விருதை நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி. பரகாஷ் குமார் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய விருந்து வாங்கியது குறித்து வைரலாகும் ஜி. வி. பிரகாஷின் வீடியோ :

இரண்டாவது தேசிய விருதை பெற்றிருக்கும் ஜி.வி. பிரகாஷ் குமார்:

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், கடந்த 2020 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளியின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று என்ற படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படமும் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இந்த படத்திற்காக கடந்த 2023ம் ஆண்டி தேசிய விருது வழங்கும் விழாவில், சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க : 71வது தேசிய விருதுகள் நிகழ்ச்சி… 2023ம் ஆண்டிற்கான தேசிய விருதுகளை பெறும் பிரபலங்கள்!

இந்த படத்தை அடுத்ததாக 2023ம் ஆண்டில் வெளியான வாத்தி படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வென்றுள்ளார். இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் பரவி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு தேசிய விருதுகளை தனது இசைக்காக ஜி.வி. பிரகாஷ் குமார் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் தேசிய விருதுகளை வென்ற பிரபலங்கள்

தமிழில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை ஜி.வி. பிரகாஷ் குமார் வென்றிருந்தார், மேலும் பார்க்கிங் படத்திற்காக, சிறந்த துணை நடிகருக்கான விருதை எம்.எஸ். பாஸ்கர், சிறந்த தமிழ் படத்திற்கான விருது பார்க்கிங் படத்திற்கும், சிறந்த திரைக்கதை விருது இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. பார்க்கிங் படக்குழு மட்டும் கிட்டத்தட்ட 3 விருதுகளை பெற்றிருந்தனர். மேலும் மலையாளத்தில் சிறந்த துணை நடிகைக்கான விருதை, நடிகை ஊர்வசியும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.