AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போனு தெரியுமா? வைரலாகும் தேதி

Jana Nayagan Movie Update: நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியாக உள்ள படம் என்பதாலே ஜன நாயகன் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே படம் குறித்த எந்த தகவல்கள் வெளியானாலும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போனு தெரியுமா? வைரலாகும் தேதி
ஜன நாயகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 25 Sep 2025 18:32 PM IST

நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்தப் படத்திற்கு பிறகு அவர் யாரது இயக்கத்தில் நடிப்பார் என்று ரசிகரக்ள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து விஜயின் 69-வது படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகின்றது. அதனப்படி தெலுங்கு சினிமாவில் பிரபல தயாரிப்பு நிறுவனமான இது தமிழில் முதன்முதலாக தயாரிக்கும் பட்ம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனம் முன்னதாக நடிகர் விஜய்க்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டது. அந்த வீடியோ விஜய் ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியது. அந்த வீடியோ பல நாஸ்டாலஜியை விஜய் ரசிகர்களுக்கு மீட்டெடுத்தது கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ இணையத்தில் வரைலானது. அதனைத் தொடர்ந்து படம் தொடர்பான அறிவிப்புகள் அவ்வபோது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

டிசம்பரில் நடைபெறும் ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா:

அந்த வகையில் ஜன நாயகன் படம் வருகின்ற ஜனவரி மாதம் 9-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குஅளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறும் என்று முன்னதாக சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலானது. அதனைத் தொடர்ந்து தற்போது படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் வருகின்ற 27-ம் தேதி டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

முன்னதாக படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை படக்குழு வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read… கோடான கோடி நன்றிகள்… கலைமாமணி விருதிற்கு நன்றி தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… கலைமாமணி விருதை வென்ற சாண்டிக்கு வாழ்த்து தெரிவித்த லோகா படக்குழு!

Follow Us