Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடான கோடி நன்றிகள்… கலைமாமணி விருதிற்கு நன்றி தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா

Actor SJ Suriyah: தமிழக அரசு சார்பாக இன்று கடந்த 2021, 2022, மற்றும் 2023-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டது. இதில் 2021- ஆண்டிற்கான பட்டியளில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கோடான கோடி நன்றிகள்… கலைமாமணி விருதிற்கு நன்றி தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா
எஸ்.ஜே.சூர்யாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 24 Sep 2025 16:58 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக வலம் வருபவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகாகி பின்பு இயக்குநராக கலம் இறங்கினார். அதன்படி நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வாலி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா இரண்டாவதாகவே நடிகர் விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். இந்தப் படமும் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பலப் படங்களை இயக்கி ரசிகர்களிடையே தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டார் எஸ்.ஜே.சூர்யா. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த எஸ்.ஜே.சூர்யா அவர் இயகும் படங்களில் அவரே நாயகனாகவும் நடிக்கத் தொடங்கினார்.

இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாவை ஏற்றுக்கொண்ட மக்கள் நாயகனாகவும் எஸ்.ஜே.சூர்யாவிற்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தனர். தொடர்ந்து அவர் இயக்கும் படங்களில் மட்டும் இன்றி மற்றவர்கள் இயக்கும் படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். நாயகனாக மட்டும் இன்றி வில்லன், குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரங்களிலேயே நடித்து வருகிறார். அதன்படி தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலேயும் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

தமிழக முதல்வருக்கு நன்றி கூறிய எஸ்.ஜே.சூர்யா:

இந்த நிலையில் இன்று நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிற்கு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருதை அறிவித்ததது. இதற்கு நன்றி தெரிவித்து எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூரியதாவது, என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த தமிழக அரசு இயல், இசை நாடக மன்றத்திற்கும், இதுவரை துணை நின்ற அனைத்து திரைத்துறை நண்பர்களுக்கும் பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கும், என் அன்பும் ஆருயிருமான என் ரசிக பெருமக்களுக்கும், இந்த பட்டத்தை எனக்கு வழங்கும் தமிழக முதல்வர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் என் மனமார்ந்த அன்பையும் நன்றியையும் தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி!! நன்றி!!! கோடான கோடி நன்றி!!! என்ற தெரிவித்து இருந்தார்.

Also Read… ஃபீல் குட் படம் பார்க்க நினைக்கிறீங்களா? அப்போ நெட்ஃபிளிக்ஸில் இந்த கிலோமீட்டர்ஸ் அண்ட் கிலோமீட்டர்ஸ் படத்தை பாருங்க

எஸ்.ஜே.சூர்யா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… 3 தேசிய விருதுகளை குவித்த பார்க்கிங் படக்குழு – வைரலாகும் போட்டோஸ்!