ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? இணையத்தில் கவனம்பெறும் தகவல்
Jana Nayagan Movie: கோலிவுட் சினிமாவில் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் ஜன நாயகன். இந்த ஜன நாயகன் படம் ஜனவரி மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படம் குறித்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றது.

கோலிவுட் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் விஜய் (Actor Vijay). இவர் தற்போது அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் ஜன நாயகன் படம் தான் தான் நடிக்கும் கடைசிப் படம் என்று அவர் அறிவித்தது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் விஜயின் நடிப்பில் வெளியாக உள்ள கடைசிப் படம் என்பதால் ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கி வருகிறார். இவர் இறுதியாக நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான துணிவு படத்தை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. வங்கி கொல்லையை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நரேன், ரெபா மோனிகா ஜான், மோனிஷா பிளெஸி, பாபா பாஸ்கர், டீஜே அருணாசலம், நிழல்கள் ரவி, ரேவதி, ஸ்ரீநாத், இர்பான் ஜைனி, அருண் குமார் ராஜன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் வருகின்ற 2026-ம் ஆண்டு ஜனவரி மாதம் 09-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.




ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது?
படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அப்டேட்கள் போல சினிமா வட்டாரங்களில் வெளியாகும் சில தகவல்களும் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.
அதன்படி முன்னதாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வெளியாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது. இந்த நிலையில் தற்போது தீபாவளி அல்லது அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜன நாயகன் படத்தின் முதல் சிங்கிள் வீடியோ வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
We call him #JanaNayagan #ஜனநாயகன் ♥️#Thalapathy69FirstLook#Thalapathy @actorvijay sir #HVinoth @thedeol @prakashraaj @menongautham #Priyamani @itsNarain @hegdepooja @_mamithabaiju @anirudhofficial @Jagadishbliss @LohithNK01 @sathyaDP @ActionAnlarasu @Selva_ArtDir… pic.twitter.com/t16huTvbqc
— KVN Productions (@KvnProductions) January 26, 2025