Jana Nayagan: ஜன நாயகன் தீபாவளி… தளபதி விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் ட்ரீட் கொடுக்கும் படக்குழு
Jana Nayagan Movie Update: தளபதி விஜய்யின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் சிறப்பான அப்டேட் ஒன்று, 2025 தீபாவளி அன்று வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் சினிமாவின் உச்ச நடிகராக இருப்பவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இதுவரை தமிழில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. அந்த வகையில், இவரின் 69வது படமாக உருவாகிவருவது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படமானது தளபதி 69 என கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படம்தான் விஜய்யின் கடைசி படம் என்றும், இதை அடுத்து அவர் முழுமையாக அரசியலில் இறங்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த ஜன நாயகன் படத்தை, பிரபல இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இவர் அஜித் குமார் (Ajith Kumar) முதல் கார்த்தி (karthi) வரை பல பிரபலங்களை படங்களை இயக்கி வெற்றி கொடுத்திருக்கிறார். அந்த வகையில், தளபதி விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் சமீபகாலமாக இணையத்தில், ஜன நாயகன் படத்தை பற்றிய ஒரு தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் வரும், 2025 தீபாவளியை முன்னிட்டு படக்குழு வெளியிடவுள்ளதாம். இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. படக்குழு இதனைப் பற்றிய அப்டேட்டை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.




இதையும் படிங்க : தனுஷின் ‘இட்லி கடை’ படத்தை யாரெல்லாம் பார்க்கலாம்? வெளியான சென்சார் அப்டேட் இதோ
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் அப்டேட்
ஜன நாயகன் படமானது முழுக்க, அரசியல் கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வரும் நிலையில், இப்படத்தின் பாடல்கள் தொடர்பான தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : ஈஸ்வரன் இன்னும் இருக்காரா? காந்தாரா சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் இதோ
அதன்படி, ஜன நாயகன் பட முதல் சிங்கிள் 2025 தீபாவளிக்கு வெளியாகவும் என கூறப்படுகிறது. இந்த முதல் பாடலை தளபதி விஜய் பாடியுள்ளாராம். தளபதி விஜய்யின் குரலில் வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகியிருக்கும் நிலையில், ஜன நாயகன் படத்தின் முதல் பாடல் எதிர்பாராத அளவிற்கு வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜன நாயகன் படம் குறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் பதிவு :
#JanaNayagan pic.twitter.com/Sv5q81Q3fl
— Vijay (@actorvijay) June 22, 2025
ஜன நாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை
விஜய்யின் 69வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை, கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது வேற எந்த நிறுவனமும் இல்லை,ரோமியோ பிக்ச்சர்ஸ் நிறுவனம்தான். இந்த நிறுவனம்தான் சுமார் ரூ 125 கோடிகள் கொடுத்து, ஜன நாயகன் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.