Madharaasi: ரூ 100 கோடி வசூல்.. ‘மதராஸி’ படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழு.. வைரலாகும் புகைப்படம்!
Madaraasi Movie Crew: தமிழ் சினிமாவில் கடந்த 2025 செப்டம்பர் 5 ஆம் தேதியில் வெளியாகி, மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றுவந்த படம் மதராஸி. இந்த படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கும் நிலையில், படக்குழு அதை கொண்டாடியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் மதராஸி (Madharaasi). இந்த படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு SKxARM என்ற தற்காலிக பெயரில் அறிவிக்கப்பட்டிருந்தது. சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸின் (AR.Murugadoss) கூட்டணியில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் (Rukmini Vasanth) நடித்திருந்தார். இவர் ஏற்கனவே, விஜய் சேதுபதியின் ஏஸ் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகர் ரிஷப் ஷெட்டியில் காந்தாரா சாப்டர் 1ன் (Kantara Chapter 1) படத்திலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்திற்கு அனிருத் (Anirudh) இசையமைத்திருந்தார். இவர்கள் இருவரின் கூட்டணியில் 2 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயனின் மதராஸி படமானது கடந்த 2025 செப்டம்பர் 5ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியானது.
இப்படமானது 2 நாளிலே உலகளவில் சுமார் ரூ 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்த நிலையில், இதுவரை உலகளவில் மொத்தமாக சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில், படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : பூஜையுடன் தொடங்கியது மோகன்லாலின் த்ரிஷ்யம் 3 படத்தின் ஷூட்டிங்
மதராஸி படத்தின் வெற்றியை கொண்டாடிய படக்குழுவின் புகைப்பட பதிவு
#Madharaasi Success 🎉 pic.twitter.com/lT1A4vJoMw
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 22, 2025
தமிழ் சினிமாவில் மீண்டும் நுழைந்த ஏ.ஆர். முருகதாஸ்
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பின் தமிழில் இயக்கி, வெளியாகி வரவேற்பை பெற்ற படமாகவும் இந்த மதராஸி படமானது அமைந்திருந்தது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், மதராஸி படத்திற்கு முன் தமிழில் இறுதியாக ரஜினிகாந்தின் தர்பார் படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது அவருக்கு தோல்விப்படமாக அமைந்தது.
இதையும் படிங்க : ‘இட்லி கடை’ ட்ரெய்லரில் இளம் ராஜ்கிரண் வேடத்தில் நடித்தது அந்த நடிகரா? வைரலாகும் தகவல்!
அதை தொடர்நது பாலிவுட் பக்கம் சென்ற இவர், சல்மான்கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தையும் இயக்கியிருந்தார். இதுவும் இவருக்கு பெரும் தோல்வி படமாக அமைந்திருந்தது. இந்த படங்களை அடுத்துதான் தமிழில் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை இயக்கியிருந்தார். இந்த படமானது வெளியாகி 3 வாரங்களை கடந்த நிலையில், தற்போது வரையிலும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ்
மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை, அமேசான் ப்ரைம் வீடியோ நிறுவனமானது பெற்றுள்ளது. இந்த நிறுவனமானது சுமார் ரூ 35 கோடிகள் கொடுத்து மதராஸி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கியதாகவும் கூறப்படுகிறது. சாதாரணமாக ஒரு படம், வெளியாகி 4 முதல் 6 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாகும். அந்த வகையில், சிவகார்த்திகேயனின் மதராஸி படமானது வரும் 2025 அக்டோபர் 3ம் தேதியில் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.