கைதி 2 படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதா? வைரலாகும் தகவல்
Kaithi 2 Movie: நடிகர் கார்த்தியின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கைதி. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Director Lokesh Kanagaraj) தற்போது தமிழ் சினிமா ரசிகர்களிடையே பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது இயக்கத்தில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. ஆக்ஷன் ட்ராமாவாக வெளியாகி இருந்த இந்தப் படத்தில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நாயகனாக நடித்து இருந்தார். இவருடன் இணைந்து பான் இந்திய நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடித்து இருந்தனர். ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தற்போது ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் கைதி 2 படத்தை இயக்க உள்ளாரா அல்லது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளாரா என்று ரசிகர்கள் தொடர்ந்து கேல்வி எழுப்பி வந்தனர்.
நடிகர் கார்த்தி இறுதியாக மெய்யழகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த ஃபீல் குட் படம் என்று ரசிகர்கள் தொடர்ந்து பாராட்டைத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் கார்த்தி நாயகனாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் கைதி. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை எழுதி இயக்கி இருந்தார். இந்தப் படத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து பலர் நடித்து இருந்தனர்.




மீண்டும் தள்ளிபோகிறதா கைதி 2 படத்தின் பணிகள்?
கடந்த ஆண்டே கைதி 2 படத்தின் பணிகள் தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் நடிகர் கார்த்தி அடுத்தடுத்து வேறு படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் கூலி படத்தின் பணிகளை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கைதி 2 பணிகளில் ஈடுபடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்தநிலையில் தற்போது கைதி 2 படத்தின் படைப்பு வேறுபாடுகள் காரணமாக படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தற்போது சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வைரலாகி வருகின்றது. இது ரசிகர்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read… வதந்திகளை நம்பாதீர்கள்… துல்கர் சல்மான் சொன்ன விசயம்!
இணையத்தில் கவனம் பெறும் எக்ஸ் தள பதிவு:
– The movie #Karthi2 is currently on hold due to creative differences.
– Fingers crossed the team sorts things out soon so the project can move forward.#LokeshKanagaraj #Coolie pic.twitter.com/4ydUWb7upL— Movie Tamil (@_MovieTamil) September 22, 2025
Also Read… பிக்பாஸ் தமிழில் இதுவரை எத்தனை ஆண்கள் எத்தனை பெண்கள் கோப்பையை வென்றார்கள் தெரியுமா? லிஸ்ட் இதோ