ஒரு ஆண்டை நிறைவு செய்த லப்பர் பந்து… இயக்குநர் சொன்ன குட் நியூஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்
Lubber Pandhu: கடந்த ஆண்டு நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் படம் லப்பர் பந்து. இந்தப் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இன்றுடன் ஓர் ஆண்டை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கோலிவுட் சினிமாவில் கடந்த ஆண்டு 20-ம் தேதி செப்டம்பர் மாதம் 2025-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் லப்பர் பந்து. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் தமிழரசன் பச்சை (Tamizharasan Pachamuthu) முத்து இந்தப் படத்தை இயக்கி இருந்தார். இவர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் நாயகனாக நடித்து இருந்த நிலையில் இவருடன் இணைந்து நடிகர்கள் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ண மூர்த்தி, சுவாசிகா, காளி வெங்கட், தேவ தர்ஷினி, பால சரவணன், கீதா கைலாசம், ஜென்சன் திவாகர், டிஎஸ்கே, ஜவஹர் சக்தி, மௌனிகா கர்ணன் ஜானகி, செந்தில்குமார், வீரமணி கணேசன், ஏ.வி. தேவா, நிவாஷினி பி.யு., என்.கே.வெங்கடசேஷன் பிரதீப் துரைராஜ், பூபாலம் பிரகதீஸ்வரன், ஆதித்ய கதிர், விஜே தாரா என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
கிராமத்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் மட்டும் இன்றி மக்களும் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடந்து இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து அடுத்ததாக யாரை இயக்க உள்ளார் என்று சினிமா வட்டாரங்களில் பல தகவல்கள் பரவி வந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.




ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும்:
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது, நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா?? இப்டி இன்னும் வெளிய சொல்ல முடியாத நிறைய Insecurities and முடியுமாக்களோட மொத்த உருவமா நான் இருந்தபோது தான் போன வருஷம் இதே செப்டம்பர் 20 லப்பர் பந்து ரிலீஸ் ஆச்சு!
first show முடிஞ்ச இந்த நாள் தான் என்னோட எல்லா கேள்விகளுக்கும் நீங்க ஒரே பதிலா சொன்னீங்க. இங்க முடியாதுன்னு ஒன்னும் இல்ல,எல்லாமே எல்லோரலையும் முடியும்.. மூடிட்டு போய் அடுத்த பட வேலைய பாருன்னு. ரொம்ப நன்றி நீங்க குடுத்த அன்புக்கும் மரியாதைக்கும். இப்டி என்ன motivate பண்ண இந்த நாளுல ஊருக்கே தெரிஞ்ச அந்த update-அ நானும் சொன்னாதான் உங்களுக்கும் அந்த நாளுக்கும் நான் பண்ற நன்றியா இருக்கும்! ஆமாங்க என்னோட அடுத்த படம் தனுஷ் சார் கூட தான் பண்றேன். தனுஷ் சார் ரொம்ப நன்றி கத சொல்லும்போது என் பதட்டத்த பொறுத்துக்கிட்டதுக்கு. நடிப்பு அசுரனுக்கு action, cut சொல்ல காத்திருக்கிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்து இருந்தார்.
தமிழரசன் பச்சைமுத்து வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
நம்மளால சினிமாவுக்கு போக முடியுமா?? போனா Ad ஆக முடியுமா??Ad ஆனாலும் நம்மளால கத பண்ண முடியுமா??பண்ண கதைய நடிகர்கள் கிட்ட சொல்லி ok பண்ண முடியுமா?? நடிகர்கள் ஓகே பண்ண கதைய சரியா படமா எடுக்க முடியுமா?? எடுத்த படத்த என்னையும் எடிட்டரையும் தவிர மத்தவங்களால முழுசா பார்க்க முடியுமா??… pic.twitter.com/ToEDCx6csf
— Tamizharasan Pachamuthu (@tamizh018) September 20, 2025
Also Read… நடிகர் விஜயின் மியூசிக் டேஸ்ட் நல்லா இருக்கும் – விஜய் ஆண்டனி சொன்ன விசயம்