‘அவரு பெரிய மனசுக்காரரு’ – நடிகர் ஹரிஷ் கல்யாணை புகழ்ந்த லப்பர் பந்து பட இயக்குநர்
Director Tamizharasan Pachamuthu: நடிகர் ஹரிஷ் கல்யாணை பெரிய மனசுக்காரர் என்று ஒரு விருது விழாவில் லப்பர் பந்து படத்தின் இயக்குநர் தமிழரசன் பச்சை முத்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் அதில் நடிகர் ஹரிஷ் கல்யாண் உடன் இருக்கும் நட்பு குறித்தும் அவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி திரயரங்குகளில் வெளியான படம் லப்பர் பந்து. இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நாயகர்களாக நடித்த இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இது இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவிற்கு அறிமுகப் படம் ஆகும். அறிமுக படத்திலேயே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார் தமிழரசன் பச்சமுத்து. லப்பர் பந்து கிரிக்கெட் காலம் முதல் கார்ட் பால் கிரிக்கெட் காலம் வரை படத்தை காட்டியிருப்பார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. லப்பர் பந்து கிரிக்கெட்டில் கெத்தாக இருக்கும் நடிகர் அட்டக்கத்தி தினேஷிற்கும் கார்ட் பால் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் ஹரிஷ் கல்யாணுக்கு இடையே ஏற்படும் ஈகோ பிரச்னை தான் படம்.
இந்தப் படத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் உடன் இணைந்து நடிகர்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவசிகா, பாலா சரவணன், காளி வெங்கட், கீதா கைலாசம், தேவதர்சினி, ஜென்சன் திவாகர் என பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இவர்களது நடிப்பு அனைத்தும் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார். படத்தில் வந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகரும் அரசியல் தலைவருமான விஜயகாந்த் உயிரிழந்த பிறகு பல படங்களில் அவரது ரெஃபரன்ஸ்களை பயன்படுத்தினர்.
ஆனால் லப்பர் பந்து படத்தில் நடிகர் விஜயகாந்திற்கு ஒரு அழகியக ட்ரிபியூட்டை வழங்கினர். ரசிகர்களிடன் எந்த திணிப்பும் இல்லாமல் படத்தின் ஊடே விஜயகாந்திற்கு அளித்த மரியாதை ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. மேலும் அந்தப் படத்தில் முன்னதாக விஜயகாந்த் நடிப்பில் வெளியான பாடலகளும் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது. மேலும் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் இருவருக்கும் படம் கம்பேக்காக அமைந்தது என்பது நிதர்சனமான உண்மை. இந்தப்படத்தை தொடர்ந்து நடிகர்கள் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் குறித்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது. சமீபத்தில் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது நடிகர் ஹரிஷ் கல்யாண் குறித்து பேசினார். அதில், தற்போது ஹரிஷ் கல்யாண் உடன் நல்ல பாண்ட் உருவாகியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது என்ன விசயம் என்றாலும் உடனே போன் செய்து பேசும் அளவிற்கு எங்களது நட்பு மாறியுள்ளது. அவர் எனது நண்பர் என்று இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நெகிழ்ச்சியாக பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.