Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்கு..

Robo Shankar Demise: நடிகர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது இறுதி சடங்கு இன்று (செப்டம்பர் 19, 2025) பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளசரபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்கு..
நடிகர் ரோபோ சங்கர்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Sep 2025 08:38 AM IST

சென்னை, செப்டம்பர் 19, 2025: தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், அவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரோபோ சங்கர் முதலில் மக்களை மகிழ்விப்பதற்காக நாடக மேடைகளில் ரோபோ போல் நடனமாடியதால், அவருக்கு “ரோபோ சங்கர்” என்ற பெயர் கிடைத்தது. இவரது இயற்பெயர் சங்கர். மெல்ல மெல்ல முன்னேறிய அவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து கிங்ஸ் ஆஃப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார். பின்னர் சினிமா வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கின.

தமிழ் சினிமாவில் நுழைந்த ரோபோ சங்கர், தனது தனித்துவமான நகைச்சுவையாலும் யதார்த்தமான நடிப்பாலும் மக்களின் மனதை வென்றார். முன்னணி நடிகர்களான ரவி மோகன், ஜீவா, விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா, விஜய், அஜித், விஷ்ணு, விஷால், விக்ரம் பிரபு, சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்துள்ளார்.

மேலும் படிக்க: நடிகர் ரோபோ சங்கர் மறைவு.. அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..

ரோபோ சங்கர் மறைவு:

இவர் கடந்த சில மாதங்களாக மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருந்த அவரது புகைப்படம் ஒன்று வைரலாகி, “இவர் ரோபோ சங்கர்தானா?” என்ற சந்தேகத்தையும் ரசிகர்களிடையே எழுப்பியது. அதே சமயம் அது பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. மஞ்சள் காமாலைக்காக சிகிச்சை பெற்று வந்த அவர், உடல் நலம் தேடியபின் மீண்டும் தனது பணியைத் தொடங்கினார்.

திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து பங்கேற்று வந்த அவர், திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். தனது மனைவி பிரியங்கா சங்கருடன் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் அது நீர் பற்றாக்குறை மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் பின்னர் அவர் மீண்டும் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

மேலும் படிக்க: சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை.. வெதர்மேன் பிரதீப் ஜான் சொல்வது என்ன?

இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல், செப்டம்பர் 18, 2025 இரவு உயிரிழந்தார். அவரது மறைவு திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

பிற்பகல் 3 மணிக்கு இறுதி சடங்கு:

நடிகர் தனுஷ் உட்பட பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ரோபோ சங்கரின் இறுதி சடங்கு இன்று (செப்டம்பர் 19, 2025) பிற்பகல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வளசரபாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.