Sai Abhyankkar: டியூட் படத்தின் ‘நல்லாரு போ’ என்ற பாடலை பாடியது இவரா?.. சாய் அபயங்கர் செய்த மாஸ் சம்பவம்!
Dude Movie Second Single :தமிழ் சினிமாவில் பிரபல இளம் இசையமைப்பாளராக இருந்து வருபவர் சாய் அபயங்கர். இவரின் இசையமைப்பில் தமிழில் முதலில் வெளியாக காத்திருக்கும் படம் டியூட். இப்படத்தின் இரண்டாவது பாடலில் சாய் அபயங்கர் செய்திருக்கும் மாஸ் சம்பவம் என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும் பென்ஸ் (Benz)படத்தின் மூலம் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar). இவர் ஆரம்பத்தில் தனி ஆல்பம் பாடல்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார். தனது இசையமைப்பில் தொடர்ந்து வெளியான பாடல்களின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியான “கட்சி சேர” என்ற பாடலின் மூலம், மக்களிடையே அறிமுகமானவர் சாய் அபயங்கர். தொடர்ந்து ஆச கூட, சித்திர புத்திரி போன்ற பாடல்களை இசையமைத்து இந்தியா அளவில் ட்ரெண்டிங் பாடகராக இருந்து வந்தார். இவர் லோகேஷ் கனகராஜின் மூலம் தமிழில் இசையமைப்பாளாராக அறிமுகமாகி தொடர்ந்து, மலையாளத்தில் பல்டி (Balti) என்ற படத்துக்கும் இசையமைத்து வருகிறார்.
மேலும் இவர், நடிகர் பிரதீப் ரங்கநாதனின் (Pradeep Ranganathan) டியூட் (Dude) படத்திற்கு இசையமைத்து வரும் நிலையில், இப்படத்தின் முதல் பாடல் கடந்த 2025 ஆகஸ்ட் இறுதியில் வெளியாகி ஹிட்டாகியிருந்தது. அதை தொடர்ந்து இப்படத்திலிருந்து “நல்லாரு போ” என்ற இரண்டாம் பாடலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தில்தான் சாய் அபயங்கர் தனது தரமான சம்பவத்தை செய்துள்ளார்.




இதையும் படிங்க : அனிருத் கூட நான் போட்டி போடுறனா? சாய் அபயங்கர் சொன்ன விசயம்
டியூட் படத்தின் இரண்டாம் பாடலை வெளியிட்ட படக்குழு
Neeyachum nallaru po 🫶🏻 Move on like a DUDE 💪🏻#NallaruPo Second gear from #Dude crosses 2M+ views on @youtube ❤️#NallaruPo (Tamil)
▶️ https://t.co/TXPQ590ReS#BaagunduPo (Telugu)
▶️ https://t.co/bvhPBFaqtZComposed by @SaiAbhyankkar 🎼
Tamil Lyrics – @Lyricist_Vivek
Tamil… pic.twitter.com/5xAQFfnKxW— Think Music (@thinkmusicindia) September 20, 2025
இந்த டியூட் படத்தின் இரண்டாவது பாடலை இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தனது தந்தையும், பின்னணி பாடகருமான திப்புவை பாடவைத்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
இதையும் படிங்க : குட் பேட் அக்லி படத்தின் காப்பி ரைட்ஸ் பிரச்னை – ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்
பாடகர் திப்பு கடந்த சில வருடங்களாக எந்த படங்களிலும் பெருமளவு பாடல்களை பாடவில்லை, தற்போது அவரை மீண்டும் கொண்டுவரும் முயற்சியில் சாய் அபயங்கர், டியூட் படத்தின் இரண்டாவது பாடலான “நல்லாரு போ” என்ற பாடலை பாட வைத்துள்ளார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் :
தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக பிரதீப் ரங்கநாதன் இருந்து வருகிறார். இவரின் 4வது படமாக உருவாகிவருவதுதான் டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கியிருக்கும் நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.
இந்த படமானது வரும் 2025 அக்டோபர் 17ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்களும் தொடர்ந்து வெளியாகிவரும் நிலையில், மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.