Sai Abhyankkar: மோகன்லால் அழைப்பு.. மலையாள படத்துக்கு இசையமைக்கும் சாய் அபயங்கர்!
Sai Abhyankkar Malayalam Cinema Debut : தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக இருந்து வருபவர் சாய் அபயங்கர். இவர் லோகேஷ் கனகராஜின் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிலையில், அடுத்தடுத்த தமிழ்ப் படங்களிலும் ஒப்பந்தமாகி வருகிறார். இந்நிலையில், தற்போது மலையாள சினிமாவிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருபவர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) . இவர் ஆரம்பத்தில் ‘கட்சி சேர’ (Katchi Sera) என்ற ஆல்பம் பாடலை பாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். அதைத் தொடர்ந்து ஆச கூட(Aasa kooda) மற்றும் சித்திர புத்திரி என அடுத்தடுத்த பாடல்களை இசையமைத்து மற்றும் பாடி மக்கள் மத்தியில் பிரபலமானார். இளம் வயத்திலே மக்களால் கவரப்பட்ட இசையமைப்பாளராகவும் ஆகினார். ஆல்பம் பாடல்களை இசையமைத்துவந்த இவருக்குத் தமிழ் சினிமாவில் முதல் அறிமுக படமாக அமைந்தது பென்ஸ் (Benz). இயக்குநர் லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) தயாரிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
இந்நிலையில், தமிழ் சினிமாவையும் கடந்து மலையாள சினிமாவிலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். நடிகர்கள் ஷேன் நிகம் (Shane Nigam) மற்றும் சாந்தனு பாக்யராஜ் (Shanthanu Bhagyaraj) முக்கிய வேடத்தில் நடித்துவரும் “பல்டி” (Balti) படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இது தொடர்பான வீடியோ அறிவிப்பும் வெளியாகியுள்ளது.




சாய் அபயங்கர் அறிமுகம் குறித்து நடிகர் சாந்தனு வெளியிட்ட பதிவு :
Welcome to Malayalam Cinema @SaiAbhyankkar ❤️🎉#Balti #BaltiOnam https://t.co/667QwfB8fE@thinkmusicindia @proyuvraaj @shanenigam1 @santhoshtkuruv1 @binugeorgealex @thinkmusicindia @Snakeplantllp @uvcommunication @proyuvraaj @baltimovie pic.twitter.com/C9jWLpW4XP
— Shanthnu (@imKBRshanthnu) July 4, 2025
இந்த வீடியோவில், சாய் அபயங்கருக்கு ஒரு அழைப்பு வருகிறது, அதில் மலையாள சினிமா புகழ் மோகன்லால் (Mohanlal) பேசி இருப்பதுபோல் இருக்கிறது. அதில் நடிகர் மோகன்லால், “வெல்கம் டூ மலையாளம் சினிமா” எனப் பேசியுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு வீடியோ மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் திரைத்துறையைத் தொடர்ந்து மலையாளத்திலும் இளம் வயதிலே இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்த வருகின்றனர்.
பல்டி திரைப்படம் :
நடிகர்கள் ஷேன் நிகம் மற்றும் சாந்தனு பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துவரும் படம்தான் பல்டி. இப்படத்தை மலையாள இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கிவருகிறார். அதிரடி கபடி விளையாட்டு தொடர்பான கதைக்களத்தில் இப்படமானது உருவாகிவருகிறது. இப்படத்தில் கதாநாயகியாக கிஸ் மற்றும் அயோத்தி போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து வருகிறார்.
இந்த படமானது வரும் 2025 ஆகஸ்ட் 29ம் தேதியில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்தில்தான் இசையமைப்பாளரா சாய் அபயங்கர் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் அபயங்கர் இசையமைத்துவரும் படங்கள் :
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர், தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸின் பென்ஸ், சூர்யாவின் கருப்பு திரைப்படம், பிரதீப் ரங்கநாதனின் டியூட் மற்றும் சிவகார்த்திகேயனின் 24வது படத்திலும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். சிலம்பரசனின் STR 49 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவந்த நிலையில், அபத்தமானது கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தமிழ் படங்களைத் தொடர்ந்து, மலையாளத்தில் நடிகர் ஷேன் நிகம் நடிப்பில் உருவாகிவரும் பல்டி படத்திலும் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.