Narivettai OTT Update : டோவினோ தாமஸ் மற்றும் சேரனின் ‘நரிவேட்டை’ பட ஓடிடி ரிலீஸ் எப்போது.. வெளியான அறிவிப்பு இதோ!
Narivettai Movie OTT Release Update : மலையாளம் மற்றும் தமிழ் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகர் டோவினோ தாமஸ். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் நரிவேட்டை. இயக்குநர் சேரன் வில்லனாக நடித்திருந்த இப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதைத் தொடர்ந்து இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் டோவினோ தாமஸ் (Tovino Thomas). இவர் தமிழ் சினிமாவில் மாரி 2 (Maari 2) திரைப்படத்தில் முக்கிய வில்லனாக நடித்து அறிமுகமானார். அதை தொடர்ந்து மலையாள சினிமாவிலும் பிரபல நடிகராக நடிக்கத் தொடங்கிய இவரின் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. டோவினோ தாமஸ் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம்தான் நரிவேட்டை (Narivettai) . இந்த படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் (Anuraj Manohar) இயக்கியிருந்தார். முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில், காதல், போராட்டம் மற்றும் அதிரடி திருப்பங்களுடன் இப்படம் அருமையாக இருந்தது என்றே கூறலாம். இப்படத்தில் தமிழ் பிரபல இயக்குநரும், நடிகருமான சேரன் வில்லனாக நடித்திருந்தார். மாறுபட்ட கதைக்களத்துடன் வெளியான இப்படமானது கடந்த 2025, மே 23ம் தேதியில் திரையரங்குகளில் வெளியானது.
இப்படமானது வெளியாக 5 வாரங்களைக் கடந்த நிலையில், படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. இந்த படமானது வரும் 2025, ஜூலை 11ம் தேதி முதல் சோனி லிவ் (Sony Liv) ஓடிடியில் வெளியாகும் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பை நடிகர் டோவினோ தாமஸ் வெளியிட்டுள்ளார்.




டோவினோ தாமஸ் வெளியிட்ட நரிவேட்டை பட ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு :
Echoes of truth, shadows of injustice! Watch #Narivetta from July 11 only on @SonyLIV ! pic.twitter.com/Frm9WkQlKH
— Tovino Thomas (@ttovino) July 2, 2025
நரிவேட்டை திரைப்படத்தின் கதைக்களம் :
இந்த படத்தில் நடிகர் டோவினோ தாமஸ் வேலை தேடும் இளைஞராக இருந்து வருகிறார். ஆனால் அவரின் வீட்டில் உள்ள கஷ்டம் காரணமாகவும், காதலியின் பேச்சைக் கேட்டும், தனக்கு பிடிக்காத போலீஸ் வேலைக்குச் செல்கிறார். போலீஸ் அதிகாரியாக வேலைபார்த்துக்கொண்டிருக்கும் போது, ஒரு பழங்குடியினர் போராட்டத்திற்காக காவல் பணியில் ஈடுபடுகின்றனர். அந்த பழங்குடியினர் தங்களுக்கு உரிய இடத்தையும் வீடுகளையும் வழங்கவேண்டும் எனப் போராட்டத்தை நடத்துகின்றனர். அது புரியாமல் நடிகர் டோவினோ தாமஸ் சில பிரச்னைகளில் ஈடுபடுகிறார். அதன் காரணமாக பழங்குடியினர் மீது தனது கோபத்தையும் காண்பிக்கிறார்.
ஆனால் அந்த பழங்குடியினர் தங்களின் உரிமைக்காகப் போராடுகின்றனர். இப்படத்தில் இயக்குநர் சேரனும் முக்கிய போலீஸ் அதிகாரியாகத்தான் நடித்துள்ளார். அவர், பழங்குடியின மக்களுக்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியை யாருக்கும் தெரியாமல் கொலை செய்கிறார். இதைக் கண்டுபிடித்த டோவினோ தாமஸ் , அந்த பழங்குடியினர்களைக் காப்பாற்றுகிறாரா? அவர்களுக்கான உரிமைகளை வாங்கி கொடுக்கிறாரா? என்பதுதான் இப்படத்தின் கதை. இப்படமானது திரையரங்குகளில் சுமார் ரூ. 29 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.