Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Shruti Haasan: மற்றவர்களை போல நானும் போனை அதிகம் பயன்படுத்துகிறேன்.. ஸ்ருதி ஹாசன் சொன்ன விஷயம்!

Shruti Haasan About Smartphone Usage : தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் ஸ்ருதி ஹாசன். இவரின் நடிப்பில் இறுதியாக கூலி படமானது வெளியாகியிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் மொபைல்போன் அறிமுக விழாவில் கலந்துகொண்ட ஸ்ருதி ஹாசன், ஸ்மார்ட் போனை அதிகம் பயன்படுத்துவது பற்றி கூறியுள்ளார்.

Shruti Haasan: மற்றவர்களை போல நானும் போனை அதிகம் பயன்படுத்துகிறேன்.. ஸ்ருதி ஹாசன் சொன்ன விஷயம்!
ஸ்ருதி ஹாசன் Image Source: Instagram
Barath Murugan
Barath Murugan | Published: 23 Sep 2025 08:30 AM IST

கோலிவுட் சினிமா முதல் பாலிவுட் சினிமா வரை மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஸ்ருதி ஹாசன் (Shruti haasan). இவர் உலகநாயகன் கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகளும் ஆவார். இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. அந்த வகையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இறுதியாக தமிழில் கூலி (Coolie) திரைப்படத்தில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், ப்ரீத்தி என்ற வேடத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார். இந்த படமானது இவருக்கு தமிழ் சினிமாவில் சிறந்த வரவேற்பை கொடுத்திருந்தது என்றே கூறலாம். இந்நிலையில், நடிகை ஸ்ருதிஹாசன் சமீபத்தில், ஸ்மார்ட் போன் (Smart phone) அறிமுக விழா ஒன்றில் கலந்துகொண்டார்.

அந்த நிகழ்ச்சியின்போது பேசிய ஸ்ருதி ஹாசன், மற்றவர்களை போலவே நானும் அதிகமாக போனை பயன்படுத்தி வருகிறேன் என்றும், அதனால் சில நல்லதும் மற்றும் கேட்டதும் இருப்பதாக கூறியிருக்கிறார். அவர் பேசியது குறித்து தெளிவாக பார்க்கலாம்.

இதையும் படிங்க : எம்.குமரன் பட பாணியில் க்ளைமேக்ஸ்… இட்லி கடை படத்தின் கதைக்களம் இதுவா?

மொபைல்போன் பயன்பாடு குறித்து ஸ்ருதி ஹாசன் பேச்சு :

அந்த நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்தது குறித்து கூறியிருக்கிறார். அதில் அவர், “எல்லோரையும் போல நானும் அதிகமாக ஸ்மார்போனை பயன்படுத்தி வருகிறேன். எனது நிறைய வேலைகளுடன் இந்த செல்போன் தொடர்பில் இருப்பதால், அதை எதுவும் செய்யமுடியவில்லை. சில நேரங்களில் அதை பயன்படுத்தும்போது நன்றாக இருக்கிறது, சில நேரங்களில் வெறுப்பாகிறது.

இதையும் படிங்க : விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன கவின் – என்ன காரணம் தெரியுமா?

மேலும் போனில் சிக்னல் இல்லையென்றால் அவ்வளவு வெறுப்பாக இருக்கும், சில நேரம் அதுவே நன்றாக இருக்கும்” என்று தனது ஸ்மார்ட் போன் பயன்பாடு குறித்து நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபனாக பேசியுள்ளார். இது குறித்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

ஸ்ருதி ஹாசனின் புதிய படம் :

நடிகை ஸ்ருதி ஹாசன் தமிழில் விஜய் சேதுபதியின் ட்ரெயின் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவர் சிறப்பு வேடத்தில் நடித்திருப்பதாக அவரே நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார். இந்த படத்தை அடுத்ததாக தெலுங்கில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும், பிரபாஸின் சலார் 2 படத்திலும் நடிக்கவுள்ளார்.

இந்த படமானது ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் இருபதாக கூறப்படுகிறது. இந்த படங்களை தொடர்ந்து மேலும் ஒரு ஹாலிவுட் படத்தில் ஸ்ருதி ஹாசன் நடிக்கவுள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.