Shruti Haasan : அன்பை எப்படி கொடுக்கவேண்டும் என அதன் மூலம் கற்றுக்கொண்டேன்… ஸ்ருதி ஹாசன்!
Shruti Haasan About Pets :தமிழ் சினிமாவில் பிரபல மிக்க நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் ஸ்ருதி ஹாசன். இவரின் நடிப்பில் கூலி படமானது இறுதியாக வெளியானது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு பிடித்த செல்லப்பிராணி பற்றியும், அதனிடம் இருந்து கற்றுக்கொண்ட வவிஷயம் பற்றியும் ஓபனாக் பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ஸ்ருதி ஹாசன் (Shruti Haasan). இவர் தமிழ், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிகர் கமல்ஹாசனின் (Kamal Haasan) மூத்த மகள் ஆவார். இவரும் தந்தையை போல சினிமாவில் நடிப்பின் மூலம், தனது பிரபலத்தை பெருக்கி வருகிறார். இவர் லாபம் படத்தை அடுத்து, கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு பின் தமிழ் சினிமாவில் மீண்டும் களமிறங்கியுள்ளார். இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி (Coolie). இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தின் (Rajinikanth) மகள் வேடத்தில் நடித்திருந்தார்.
இந்த படமானது இவருக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகை ஸ்ருதிஹாசன், தெலுங்கு மொழியிலும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், தனக்கு பிடித்த செல்லப்பிராணி குறித்தும் மற்றும் அதன் குணாதிசயங்கள் மூலம் கற்றுக்கொண்டது குறித்தும் ஓபனாக பேசியுள்ளார். அது குறித்து பார்க்கலாம்.




இதையும் படிங்க : வெளியானது கும்கி 2 படத்தின் அறிவிப்பு.. ஹீரோ யார் தெரியுமா?
தனக்கு பிடித்த செல்லப்பிராணி குறித்து ஸ்ருதி ஹாசன் பேசிய விஷயம் :
அந்த நேர்காணலில், பல்வேறு விஷங்களை நடிகை ஸ்ருதி ஹாசன் பகிர்ந்துகொண்டார். மேலும் அவர் அதில், “தனக்கு பிடித்த செல்லப்பிராணி குறித்தும் பேசியிருந்தார். அதில் ஸ்ருதி ஹாசன், எனக்கு பூனைகள் என்றால் மிகவும் பிடிக்கும், ஏனென்றால் எனக்கும் தனிமை மிகவும் பிடிக்கும். என்னுடன் எப்போது எனது பூனை ஒன்று இருக்கும், அதன்பெயர் கிளாரா. அதுதான் எனக்கு குழந்தை போல, பூனைகளிடம் இருந்து பல்வேறு விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளமுடியும்.
இதையும் படிங்க : தனது சொந்த வீட்டை பள்ளிக்கூடமாக மாற்றும் ராகவா லாரன்ஸ்.. இலவச கல்வி வழங்குவதாக அறிவிப்பு!
அதனிடம் இருந்து, எப்படி போதுமான அன்பை கொடுக்கவேண்டும் என்றும், எதிலும் தேவையில்லாமல் கால் வைக்க கூடாது என்றும் மற்றும் உங்கள் சொந்த நேரத்தில் எப்படி வாழ்வது என்பதையெல்லாம் பூனைகளிடம் இருந்து தெரிந்துகொண்டேன். இரவில் அது நன்றாக விழித்திருக்கும், தேவை படும்போது அது நன்றாக தூங்கும்.
ஸ்ருதி ஹாசனின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் :
View this post on Instagram
எதனால் எனக்கு பூனைகள் மிகவும் பிடிக்கும். உண்மையை சொல்லப்போனால், எனக்கு நாய்கள்தான் முதல் பெட், அதற்கு பின்தான் பூனைகள். என்னுடைய வீட்டில் நாய் மற்றும் பூனைகள் இருக்கிறது” என்று அந்த நேர்காணலில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபனாக பேசியிருந்தார். இந்த தகவலானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.