Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kumki 2: வெளியானது கும்கி 2 படத்தின் அறிவிப்பு.. ஹீரோ யார் தெரியுமா?

Kumki 2 Movie Update : கடந்த 2012ம் ஆண்டு வெளியான எமோஷனல் மற்றும் காதல் கலந்த படம்தான் கும்கி. இதை பிரபு சாலமோன் இயக்க, விக்ரம் பிரபு நடித்திருந்தார். இந்த படமானது வெளியாகி மிக பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கும்கி 2 படமானது உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து விவரமாக பார்க்கலாம்.

Kumki 2:  வெளியானது கும்கி 2 படத்தின் அறிவிப்பு.. ஹீரோ யார் தெரியுமா?
கும்கி 2Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 11 Sep 2025 20:34 PM IST

கோலிவுட் சினிமாவில் நடிகர் விக்ரம் பிரபு (Vikram Prabhu) மற்றும் லட்சுமி மேனனின் (Lakshmi Menon) அறிமுக படமாக வெளியானது கும்கி (Kumki). கடந்த 2012ம் ஆண்டு இயக்குநர் பிரபு சாலமோன் (Prabhu Solomon) இயக்கத்தில், வெளியான இப்படமானது பான் இந்திய அளவில் மிகவும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படமானது யானை பாகனின் வாழ்க்கை மற்றும் அவனின் காதல் போன்ற கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. மேலும் யானையை சுற்றி இந்தப் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தப் படம் விக்ரம் பிரபுவின் அறிமுகப்படமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்துதான், தற்போது கும்கி பார்ட் 2 (Kumki 2) படம் உருவாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் அறிவிப்பை நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 13 வருடங்களுக்கு பின், இந்த கும்கி படத்தின் பார்ட் 2 உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது இந்த கும்கி 2 படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : கயலாக இட்லி கடை படத்தில் நடிக்கும் நடிகை நித்யா மேனன் – போஸ்டர் வெளியிட்ட படக்குழு

கும்கி 2 படம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட சிலம்பரசன்

கும்கி 2 திரைப்படத்தின் நடிகர்கள்

இந்த கும்கி 2 படத்தை இயக்குநர் பிரபு சாலமோன்தான் இயக்கவுள்ளார். இவரின் இயக்கத்தில் பென் மூவிஸ் மற்றும் சினிமா பையன் போன்ற தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரிக்கவுள்ளது. மேலும் இப்படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரிதா ராவ் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே, லெனின் பாண்டியன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்க : மோனிகா பெலூசி… எறங்கி வந்தாச்சி.. பூஜா ஹெக்டேவின் நடனத்தில் வெளியானது கூலி பட ‘மோனிகா’ வீடியோ பாடல்!

மேலும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிகர் மதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அர்ஜுன் தாஸை தவிர மற்ற நடிகர்கள் புதுமுகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கும்கி 2 படத்தின் கதைக்களம்

கும்கி படத்தை போல, இந்த கும்கி 2 படமும் யானையை வைத்து மாறுபட்ட கதைக்களத்தில் உருகிவாகவுள்ளதாம். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன்தாஸ் கதாநாயகனாக நடிக்கும் நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது இந்த படமானது வரும் 2026 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.