Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Coolie : மோனிகா பெலூசி… எறங்கி வந்தாச்சி.. பூஜா ஹெக்டேவின் நடனத்தில் வெளியானது கூலி பட ‘மோனிகா’ வீடியோ பாடல்!

Monica Video Song : இயக்குநர் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளியான படம் கூலி. இந்த படமானது, அதிரடி கேங்ஸ்டர்ஸ் கதைக்களத்துடன் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இப்படத்தில் ஹிட்டான பாடலில் ஒன்றுதான் மோனிகா. தற்போது இப்பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Coolie : மோனிகா பெலூசி… எறங்கி வந்தாச்சி.. பூஜா ஹெக்டேவின் நடனத்தில் வெளியானது கூலி பட ‘மோனிகா’ வீடியோ பாடல்!
மோனிகா வீடியோ பாடல்
Barath Murugan
Barath Murugan | Published: 11 Sep 2025 18:36 PM IST

தமிழ் சினிமாவில் இந்த 2025 ஆம் ஆண்டு பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம்தான் கூலி (Coolie). இந்த படத்தில் ரஜினிகாந்த் (Rajinikanth) ஆக்ஷ்ன் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படமானது கடந்த 2023 ஆம் ஆண்டு இறுதியில், தலைவர் 171 என அறிவிக்கப்பட்டிருந்தது. லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடித்திருக்கும் நிலையில், அவருடன் நடிகர்கள் ஆமிர்கான், நாகார்ஜுனா (Nagarjuna), உபேந்திரா, சவுபின் ஷாஹிர், ஷ்ருதி ஹாசன் (Shruti Haasan) மற்றும் ரட்சிதா ராம் என பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த படமானது கடந்த 2025 ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகியிருந்தது. ரஜினிகாந்தின் திரைப்படம் என்பதால் நல்ல ஓப்பனிங்க் கிடைத்தது.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் (Anirudh) இணையமைத்திருந்தார். அதில் நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) , சிறப்பு நடனமாடிய பாடல்தான் மோனிகா (Monica). இந்த பாடலானது திரையரங்கத்தையே அதிரவைத்த நிலையில், மக்கள் மத்தியில் ட்ரெண்டிங் பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது கூலி படக்குழு மோனிகா பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது. இது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ஓடிடியில் வெளியானது கூலி படம்… ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

கூலி படக்குழு வெளியிட்ட மோனிகா வீடியோ பாடல் பதிவு

இதையும் படிங்க : ஜன நாயகன் படத்தில் 100 சதவீதம் விஜய்யிசம் இருக்கும்.. எடிட்டர் கொடுத்த அப்டேட்!

மோனிகா பாடலுக்காக பூஜா ஹெக்டே வாங்கிய சம்பளம்

கூலி படத்தில் நடிகை பூஜா ஹெக்டே வெறும் சிறப்பு பாடலில் மட்டுமே நடனமாடியிருந்தார்.  ஆனால் இந்த கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்பதால், நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தின் பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடலுக்கு நடனமாடுவதற்கு பூஜா ஹெக்டே சுமார் ரூ 3 கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

கூலி திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ்

ரஜினிகாந்த் நடிப்பில் 171வது படமாக கூலி படம் வெளியானது. மேலும் இந்த 2025ம் ஆண்டில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமாவில், தனது 50 வருடத்தைக் கடந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதை முன்னிட்டுத்தான் கூலி படமானது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வெளியாகி 4 வாரங்களை கடந்த நிலையில், 2025 செப்டம்பர் 11 ஆம் தேதி  முதல் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிவருகிறது. மேலும் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.