Jana Nayagan : ஜன நாயகன் படத்தில் 100 சதவீதம் விஜய்யிசம் இருக்கும்.. எடிட்டர் கொடுத்த அப்டேட்!
Jana Nayagan Movie : தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் 69வது திரைப்படமாக உருவாகியிருப்பது ஜன நாயகன். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜன நாயகன் எடிட்டர், ஜன நாயகன் படமானது 100 சதவீதம் விஜய்யிசம் கொண்ட படமாக வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தளபதி விஜய்யின் (Thalapathy Vijay) 69வது படமாக கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்த திரைப்படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H.Vinoth) இயக்கியுள்ளார். விஜய்யின் இந்த படமானது முழுவதும், அரசியல் சார்த்த கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாம். இந்த படத்தில் தளபதி விஜய் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் பூஜா ஹெக்டே இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜன நாயகன் படத்தில் தளபதி விஜய்யுடன் பிரகாஷ் ராஜ், பாபிதியோல், நரேன், மமிதா பைஜூ (Mamitha baiju), பிரியாமணி மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படமானது வரும் 2026 ஜனவரி 09ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய, ஜன நாயகன் பட எடிட்டர், “ஜன நாயகன் படமானது 100 சதவீதம் விஜயிசம் திரைப்படமாக இருக்கும்” என அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.




இதையும் படிங்க : விஜய்யின் ஜன நாயகனுடன் மோதுவது யார்? சூர்யாவின் கருப்பா? சிவகார்த்திகேயனின் பராசக்தியா?
ஜன நாயகன் படம் குறித்து அப்படத்தின் எடிட்டர் சொன்ன விஷயம் :
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் ஜன நாயகன் பட எடிட்டர் பிரதீப் இ.ராகவ் கலந்துகொண்டார். அப்போது அந்த நேர்காணலில் பேசிய எடிட்டர் பிரதீப் இ.ராகவ், ஜன நாயகன் படம் குறித்து தொகுப்பாளர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த எடிட்டர் பிரதீப் இ.ராகவ், ” ஜன நாயகன் படம் பற்றி நான் எதாவது சொன்னேன் என்றால் என்னை படத்தில் இருந்தே தூக்கிவிடுவார்கள். மேலும் இந்த ஜன நாயகன் படத்தில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க : எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ அவர்தான் – கல்யாணி பிரியதர்ஷன் சொன்னது யார் தெரியுமா?
நானும் அந்த சுவாரஸ்யமான விஷயங்களுக்கு காத்திருக்கிறேன். அதற்கான நேரம் வரும், படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. 100 சதவீதம் விஜய்யிசம் திரைப்படமாகத்தான் வந்திருக்கிறது” என அந்த நேர்காணலில் எடிட்டர் கூறியிருந்தார். இந்த தகவலானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜன நாயகன் குறித்து எடிட்டர் பேசிய வீடியோ பதிவு :
“#JanaNayagan has many exciting elements. It’s coming out really well👌. 100% Vijayism is guaranteed and you’ll witness it fully🥵. Even I’m waiting to watch it🤩”
– Editor #PradeepERagav pic.twitter.com/6zRWJLMkfb— AmuthaBharathi (@CinemaWithAB) September 11, 2025
ஜன நாயகன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு
ஜன நாயகன் படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்த படமானது மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் இருக்கிறது. இப்படமானது சுமார் ரூ 400 கோடிகளுக்கு மேல் பொருட்செலவில் உருவாகியிருக்கிறது. மேலும் விஜய்யின் கடைசி திரைப்படமாக இந்த ஜன நாயகன் படம் கூறப்படும் நிலையில், மேலும் இப்படமானது சுமார் ரூ 800 கோடிகளுக்கு மேல் வசூல் செய்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.