விஜய்யின் ஜன நாயகனுடன் மோதுவது யார்? சூர்யாவின் கருப்பா? சிவகார்த்திகேயனின் பராசக்தியா?
Jana Nayagan Clash Movies : தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருப்பவர் தளபதி விஜய். இவரின் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் படமானது உருவாகியுள்ளது. இந்த படமானது வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்துடன் சூர்யாவின் கருப்பு மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி போன்ற படங்கள் மோதவுள்ளதாக கூறப்படுகிறது.

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் கடைசி திரைப்படமாக உருவாகிவருவது ஜன நாயகன் (Jana Nayagan). இந்த படத்தை பிரபல இயக்குநரான ஹெச். வினோத் (H.Vinoth) இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று மற்றும் துணிவு போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இந்த படங்களை அடுத்ததாக தளபதி விஜய்யின் 69வது படமான, ஜன நாயகன் படத்தையும் இயக்கியுள்ளார். இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பல்வேறு பிரபல நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026 ஜனவரி 9 ஆம் தேதியில் பொங்கல் பண்டிகையை (Pongal festival) முன்னிட்டு வெளியாகவுள்ளது.
இப்படத்துடன் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) பராசக்தி (Parasakthi) படமானது மோதவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் சூர்யாவின் (Suriya) கருப்பு (Karuppu) படமும் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.




இதையும் படிங்க : எனது அடுத்த படங்கள் இதுதான்… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்!
இந்த கருப்பு படத்தை படக்குழு, 2025 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்ட நிலையில், சில காரணங்களால் படம் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கருப்பு படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு, இந்த 2025 செப்டம்பர் மாத இறுதிக்குள் வெளியாகும் என கூறப்படுகிறது.
கருப்பு மற்றும் பராசக்தி படங்களின் ஓடிடி விற்பனை
தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ஓடிடி வெளியீட்டு ரிலிஸ் உரிமையை, அமேசான் ப்ரைம் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து பராசக்தி படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையும், கருப்பு திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையும் விற்கப்படாமல் இருப்பதால், இந்த இரு படங்களில் ரிலீஸ் தேதியில் குழப்பம் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஆடியோ லஞ்ச் தேதியை லாக் செய்த இட்லி கடை படக்குழு – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
பராசக்தி படமானது, 2026 பொங்கலுக்கு வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால் இன்னும் படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடையவில்லை. இதன் காரணமாக பராசக்தி படமும் தள்ளிப்போக அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜன நாயகன் பட ரிலீஸ் குறித்து தளபதி விஜய் வெளியிட்ட பதிவு :
#JanaNayagan pic.twitter.com/Sv5q81Q3fl
— Vijay (@actorvijay) June 22, 2025
ஜன நாயகன் படத்தை ஹெச். வினோத் இயக்க, கே.வி.என். ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜயுடன் நடிகர்கள், பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், ஸ்ருதி ஹாசன், வரலட்சுமி சரத்குமார், மமிதா பைஜூ உட்பட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.